சென்னை கலைவாணர் அரங்கில் உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் – 2023 வழங்கும் விழா சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தலைவர்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர்.க.மணிவாசன்.இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் (27.09.202) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன்அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சிகே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 54 தொழில்நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள்உள்ளிட்ட சுற்றுலாசெயல்பாட்டாளர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள். தொடர்ந்து சுற்றுலாவழிகாட்டிகளுக்கான நெறிமுறைகள் பதிவுத்திட்டம் – 2023 மற்றும் சுற்றுலா சேவை வழங்குபவர்களுக்குபதிவுகள் மேற்கொள்வதற்கான திட்டம் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில்சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரிஇ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது தமிழ்நாட்டை உலக அளவில் கொண்டு செல்வதில் சிற்பியாக திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கி பொதுமக்கள் சுற்றுலா சென்று வரசுற்றுலா பேருந்து, சுற்றுலாத்தலங்களில் உணவகம், ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், சுற்றுலாபயணத்திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தி நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு சுற்றுலாத்துறையை விளங்கச் செய்தார்கள்.
தமிழ்நாட்டை உலகின் முக்கிய இடமாக உருவாக்குவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைஅடைவதற்கான திட்டங்களை தீட்டி, அவற்றை செயல்படுத்தி வருகின்றார்கள். இந்த லட்சியத்தை அடைவதில்சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றும் வகையில் நேற்றையதினம் ”தமிழ்நாடு சுற்றுலா கொள்கை – 2023” யை வெளியிட்டுள்ளார்கள்.
சுற்றுலாவிற்கு தொழில் தகுதி கிடைக்க வழிசெய்துள்ளார்கள். சுற்றுலா தொழில் முனைவோர்களுக்குஊக்கத்தொகை, மானியம் வழங்க கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் சுற்றுலா வளர்ச்சியைஉறுதிசெய்து, சுற்றுலாவின் பலன்களை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்தி, திறன் மேம்பாடுமற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் அதிகளவில் உருவாக்கப்படுவார்கள்.
வருடாந்திர மாநில மொத்த உற்பத்தியில் குறைந்தது 12 சதவீதம் சுற்றுலாத்துறை பங்களிப்பு அளிக்கும்வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். சுற்றுலா மற்றும் அதன் துணைத் தொழில்கள் மூலம் தமிழகத்தில்25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சுற்றுலாத்துறையில் ரூ.20,000 கோடி ரூபாய்முதலீட்டை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுற்றுலா மற்றும் அதன் துணைத்தொழில்களில் ஈடுபட்டு வரும் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.