உலக சுற்றுலா தினத்தினையொட்டி  ஆதி திராவிட நல மாணவியர் விடுதியைச் சேர்ந்த 50 மாணவிகள்  மாமல்லபுரத்திற்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பேருந்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தினத்தினை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக சுற்றுலாத் தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும்வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.  அதன் அடிப்படையில்சென்னை மாவட்டத்தில், வில்லிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியைச் சேர்ந்த 50 மாணவிகள் மாமல்லபுரத்திற்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.  இதற்கான சுற்றுலா பேருந்தினை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, ..., அவர்கள் இன்று(10.10.2023) கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

 இம்மாணவிகள் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற  கடற்கரைகோவில், ஒரே பாறையில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட  அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் பந்து, ஐந்து ரதங்கள்ஆகிய வரலாற்று புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வழிகாட்டியின் விரிவான விளக்க உரையுடன்கண்டும், கேட்டும் ரசித்தனர்.   மாணவிகளுக்கு சுற்றுலாத் துறையின் மூலமாக காலை மற்றும் மாலை சிற்றுண்டிமற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை வளாக உணவகத்தில் மதிய உணவும்வழங்கப்பட்டது.

 சுற்றுலா சென்ற மாணவிகள் தாங்கள் தங்கள் தோழிகளுடன் சேர்ந்து உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கோயில்உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பார்வையிட ஏற்பாடு செய்ததற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களுக்கும், சுற்றுலாத் துறைக்கும் நன்றியை தெரிவித்தார்கள்.  சுற்றுலாப் பயண வழியனுப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்திருமதி.ஹேமலதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் (முகூபொ) திரு. சு. கமலக்கண்ணன் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.