சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 நடைபெற உள்ளதையொட்டி, அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில்  (4.1.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, முதன்மை செயலாளர் /சுற்றுலாஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் /மேலாண்மை இயக்குநர் காகர்லாஉஷா, ..., முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வுமேற்கொண்டார்.

 சுற்றுலா வளர்ச்சித்திட்டப்பணிகளை பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்குவரும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும், சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள், உலக சுற்றுலாபயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் என்று மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள்மற்றும் மேலாளர்கள் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தங்கும்வகையில் சுத்தமாக பராமரித்திட வேண்டும் என அறிவுருத்தினார். பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன்  சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 நடைபெற உள்ளதையொட்டி, அரசுத்துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு துறை அலுவலர்கள் மற்றும் அரங்கம் அமைக்கும் பணியில்ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களிடம் அறிவுருத்தினார்.

 சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 யொட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை,  வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, தொழில், முதலீடுமற்றும் வர்த்தகத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பள்ளி கல்வித்துறை,  உயர்கல்வித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, செய்தி மற்றும்மக்கள் தொடர்புத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறை, பட்டு வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, சுற்றுலாத்துறை, தகவல்தொழில்நுட்பத்துறை, சி.எம்.டி., ஆவின், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, சென்னை மெட்ரோஇரயில் நிறுவனம், சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் பொதுத்துறைநிறுவனங்களின் அரங்கங்கள் – 47, ஒன்றிய அரசு நிறுவனங்களின்2 அரங்கங்கள், பிற மாநில அரசுஅரங்கங்கள் – 2 என மொத்தம் – 51 அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
 இந்த ஆய்வுக்கூட்டம் மற்றும் ஆய்வுகளின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் .கமலா உள்பட சுற்றுலாத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.