தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் முன்பதிவு செய்து, வருகின்ற கோடை விடுமுறையில் மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பயன்பெற வேண்டும் – பொதுமக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அழைப்பு.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடுசுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் (7.3.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறுசுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி...., முன்னிலையில் சுற்றுலாத்துறைஅமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

         வருகின்ற கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள்வருகைதந்து மகிழ்ச்சியாக சுற்றுலா மேற்கொள்ள மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் பிறதுறைஅலுவலர்களுடன் இணைந்து முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்த செலவில்சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி அளிக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தமிழ்நாடு ஓட்டல்தங்கும் விடுதிகளின் அறைகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில்தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுருத்தினார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில்வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முன்னணி சுற்றுலாத் தலமாக முன்னேறிஉள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைவாழிடங்களுக்குசுற்றுலா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் திருப்பதி, சென்னைமாமல்லபுரம், காஞ்சிபுரம்மாமல்லபுரம், திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி, என ஒரு நாள்சுற்றுலா,  மைசூர்பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு  மற்றும் மூணார் என மூன்றுநாட்கள் செல்லும் சுற்றுலா,  அறுபடை வீடு முருகன் கோவில்கள் செல்லும் நான்கு நாட்கள் சுற்றுலா, எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவாமந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும். 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா, யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டபழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறுவகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   வருகின்ற கோடை விடுமுறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில்முன்பதிவு செய்து மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொண்டுபயன்பெற வேண்டும்.

 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் தமிழ்நாடு முழுவதும்முக்கிய நகரங்களில் நகரின் மையப்பகுதிகளில் குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில்உள்ளன. ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தொடர்ந்து வெவ்வேறு ஊர்களில் 3 நாட்கள்தங்குபவர்கள், ஒரே விடுதியில் 3 நாட்களுக்கு தங்குபவர்கள், மொத்தமாக 5 அறைகள், 10 அறைகள், 20 அறைகள் என முன்பதிவு செய்பவர்கள் ஆகிய நபர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் வெவ்வேறு சதவீதத்தில்வழங்கப்படுகின்றன. மேலும் மூத்த குடிமக்கள், போர் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தள்ளுபடிசலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு நபர் இந்த தள்ளுபடி சலுகைகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமேபெற இயலும்.

          தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்கள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும்விடுதி அறைகளை முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.comஎன்ற இணைதள பக்கத்தில் தங்களது செல்போன் அல்லது கணினி மூலமாக முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்180042531111  மற்றும் 044-25333333, 044-25333444  ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம் என்றுமாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் .கமலா, சுற்றுலாத்துறைஇணை இயக்குநர் புஷ்பராஜ் உள்பட சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.