சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் தலைமையில் (8.7.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்துசுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன் இ.ஆ.ப., , சுற்றுலாஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில்வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டிற்குஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும்வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்துசெயல்படுத்தி வருகின்றார்கள்.
2024-2025 சுற்றுலாத் துறை அறிவிப்புகள்
1. அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதாதேவாலயப்பகுதி, சிவகங்கை மாவட்டம் பிரான்மலை பகுதி, திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி மற்றும் தெற்கு கள்ளிக்குளம்தேவாலயப்பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகியவழிபாட்டு சுற்றுலாத் தலங்களில் அடிப்படை வசதிகள் ரூ. 8.10 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
2. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி மற்றும் கோட்டை நங்காஞ்சியாறு அணைப்பகுதி, மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி அருவிமற்றும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலைஅருவி ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.10.20 கோடிமதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
3. கடற்கரை மாவட்டங்களான இராமநாதபுரத்தில் உள்ளதொண்டி கடற்கரை, கன்னியாகுமரியில் சங்குதுறை, சொத்தவிளை கடற்கரை பகுதி, சூரிய காட்சிமுனை மற்றும்தூத்துக்குடி மாவட்டம். காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளில்ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன.
4. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அவதானப்பட்டிஏரிப்பகுதி மேம்பாடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரிமலையில் அமைந்துள்ள புங்கனூர் ஏரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைக்குளம் ஏரியில் படகு குழாம் மற்றும் இதரசுற்றுலாப் பணிகள் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படஉள்ளன.
5. நீலகிரி மாவட்டத்தில் உல்லாடாவில் கிராமியச் சுற்றுலாவைமேம்படுத்தல், கேத்தி மைனல்லா மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம்வால்பாறை Hornbill பகுதியில் காட்சிமுனை அமைத்தல் ஆகியபணிகள் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
6. சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குதல், கலாச்சாரங்கள், பல்வேறு இயற்கை தலங்கள், பழங்கால மரபுகள்ஆகியவற்றை காட்சிப்படுத்தும் வகையில், பல்வேறு சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக பெருந்திட்டம் (Master Plan) ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட உள்ளது.
7. மருத்துவம் மற்றும் ஆரோக்கியச் (Medical and Wellness Tourism) சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கோயம்புத்தூரில்பல்வேறு மருத்துவ தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவச் சுற்றுலா மாநாடு ரூ.1.00 கோடி மதிப்பீட்டில்நடத்தப்பட உள்ளது.
8. தமிழ்நாட்டில் நீர் சாகச விளையாட்டுக்களை ஊக்குவிக்கும்பணிகளுக்கு ரூ.1.00 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
9 தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கடற்கரை மற்றும்சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காடு ஏரிப்பகுதிஆகியவற்றில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்மேற்கொள்வதற்கு ஏதுவாக சுற்றுலாப் பெருந்திட்டம் (Master Plan) ரூ.1.00 கோடி செலவில் தயாரிக்கப்படும்.
10 தமிழ்நாட்டில் கிராமியச் சுற்றுலா (Rural Tourism) மற்றும்வான்நோக்கு சுற்றுலா (Astro Tourism) ஆகியவற்றைமேம்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility Study Report) ரூ. 50 இலட்சம் செலவில் தயாரிக்கப்படும்.
11. ஊட்டி, குன்னூர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் பிறமுக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல்களை தரம் உயர்த்தும் பணிகள் ரூ.18.80 கோடிமதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
12. தமிழ்நாடு சுற்றுலாப் பயணச்சந்தை (Tamil Nadu Travel Mart) ரூ. 1.00 கோடி செலவில் சென்னையில் நடத்தப்படும் என மொத்தம் 12 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சுற்றுலாத்துறை அலுவலர்கள் அனைவரும் விரைந்து பணியாற்ற வேண்டும். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள், உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அலுவலர்கள், மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.