நாள் சுற்றுலா தொகுப்பு பயணங்கள் மேற்கொண்டு நீங்காத நினைவுகளை மனதில் பதிவு செய்ய பொதுமக்களுக்கு அமைச்சர் அழைப்பு.

சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலாவளாக கூட்டரங்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் (9.7.2024) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுற்றுலா, பண்பாடுமற்றும் அறநிநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப. ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில்  சுற்றுலாத்துறை அமைச்சர்  பேசுகையில் தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், சுற்றுலா பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என குறைந்த செலவில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சுற்றுலா சேவைகளை வழங்கி வருகின்றது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளின் விருப்பமான முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஓட்டல் தமிழ்நாடு உணவகங்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் அமுதகம் என்று பெயர் சூட்டியுள்ளார்.  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத காட்சிகளை மனதில் பதிவு செய்ய பல்வேறு சுற்றுலா பயணத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

 ஒரு நாள் சென்னை – மாமல்லபுரம் சுற்றுலா பயணத்தில்வாலஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு புறப்படும் பேருந்து திருவான்மியூர் அருள்மிகுமருந்தீஸ்வரர் திருக்கோவில், சோழிங்கநல்லூர் இஸ்கான்டெம்பிள், முட்டுக்காடு தட்சண சித்ரா பாரம்பரிய அருங்காட்சியகம், முட்டுக்காடு படகு குழாம், சென்னை முதலைக்காப்பகம், சாளுவன்குப்பம் புலிக்குடைவரை, மாமல்லபுரம் ஐந்துரதம், கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு ஆகிய இடங்களைசுற்றுலா பயணிகள் பார்வையிட்ட பின்னர் இரவு 7.00 மணி்ககுசுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

ஒரு நாள் காஞ்சிபுரம் – மாமல்லபுரம் சுற்றுலா பயணத்தில்வாலஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பேருந்து அருள்மிகு ஏகாம்பரநாதர்திருக்கோவில், அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன்திருக்கோவில், அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில், கைத்தறி பட்டு அங்காடிகள் செல்லுதல், மாமல்லபுரம் ஐந்து ரதம், கடற்கரை கோவில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டைபாறை, முட்டுக்காடு படகு குழாம் ஆகிய இடங்களை சுற்றுலாபயணிகள் பார்வையிட்ட பின்னர் இரவு 7.00 மணிக்கு சுற்றுலாவளாகத்தை வந்தடையும்.

ஒரு நாள் பாண்டிச்சேரி சுற்றுலா பயணத்தில் வாலஜா சாலைசுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும்பேருந்து புகழ்பெற்ற ஆரோவில் சுற்றுலாத்தலம், பாண்டிச்சேரிஅருங்காட்சியகம், பாண்டிச்சேரி கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், முதலியார் குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களை சுற்றுலாபயணிகள் பார்வையிட்ட பின்னர் இரவு 7.00 மணிக்கு சுற்றுலாவளாகத்தை வந்தடையும்.

இந்த சுற்றுலா பயணத்திட்டங்களை மேற்கொள்ள 10 இருக்கைகளுக்கு மேல் சேர்ந்தாற்போல் முன்பதிவு செய்பவர்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணச் சலுகைஅளிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகளின் பயணத்திற்காக மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் 2 வால்வோ ரக சொகுசு பேருந்துகள், 5 அதிநவீன சொகுசு பேருந்துகள் என குறுகிய காலத்தில் 7 பேருந்துகளை தொடங்கி வைத்துள்ளார்கள். முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த புதிய பேருந்துகள்மூலமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள்சுற்றுலா தொகுப்பு பயணங்களை உறவினர்களுடன்மேற்கொண்டு நீங்காத நினைவுகளை பொதுமக்கள் மனதில் பதிவுசெய்ய வேண்டும் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் திருமதி.ச.கவிதா உள்பட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர்கள், மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.