நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டுகள், நடனம், இசை, திருவிழாக்கள், உணவு வகைகள், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன், சுற்றுலாவின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்றாவது ஆண்டாக வழங்கப்படும் இவ்விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 27.09.2024 அன்று வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகள் சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க வழிவகுக்கும்.
விருதுகளின் வகைப்பாடுகள்:
- தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator)
- சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator)
- சிறந்த பயண பங்குதாரர் (Best Travel Partner)
- சிறந்த விமான பங்குதாரர் (Best Airline Partner)
- சிறந்த தங்குமிடம் (Best Accommodation)
- சிறந்த உணவகம் (Best Restaurant)
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம்(Tamil Nadu Tourism Development Corporation Star Performer)
- சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் (Tourism Promotion Award (Best District))
- சுத்தமான சுற்றுலாத்தலம் (Cleanest Tourism Destination)
- பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator)
- சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Adventure Tourism and Camping site Operator)
- சிறந்த MICE சுற்றுலா அமைப்பாளர் (Best Meetings Incentives Conference and Exhibition (MICE) Organizer)
- சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர் (Best Social Media Influencer)
- சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide)
- தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் (Best Advertisement on Tamil Nadu)
- சுற்றுலாவினை பிரபலபடுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரபடுத்துதல் (Best Tourism Promotion Publicity Material)
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் (Best Educational Institution for Tourism and Hospitality)
மூன்றாவது தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்-2024க்கான விண்ணப்பத்தினை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 20.08.2024-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேதியினை நீட்டித்து26.08.2024க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.