பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும்  புகழ்பெற்ற ஐஃப்டிஎம் டாப் ரேசா2024 ( IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தககண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடுசுற்றுலாத்துறையின் அரங்கினை பிரான்ஸ் நாட்டிற்க்கானஇந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் திறந்து வைத்தார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் ஐஃப்டிஎம் டாப் ரேசா 2024 (IFTM TOP RESA 2024) சுற்றுலாவர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடுசுற்றுலாத்துறையின் அரங்கினை சுற்றுலா ஆணையர் மற்றும்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர்திரு.சி.சமயமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பிரான்ஸ்நாட்டிற்கான இந்திய தூதர் திரு.ஜாவத் அஷ்ரப் அவர்கள் (17.9.2024) அன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பானநடவடிக்கைகளால் தற்போது, இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. சுற்றுலாவைமேம்படுத்தும் வகையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச அலைச்சறுக்கு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகமாமல்லபுரம் உலகளவில் முக்கியத்துவம் பெற்றுவெளிநாட்டவர்களால் அதிக அளவில் பார்வையிடப்படும்சுற்றுலாத்தலமாக விளங்கி வருகின்றது. தற்போது தீவுத்திடலைச்சுற்றி நடைபெற்ற ஃபார்முலா 4 சாலை கார் பந்தயம் சென்னைநகரின் பெயரை உலக விளையாட்டு ரசிகர்களின் மனதில் நீங்காதஇடம் பெறச் செய்ததுடன், தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பினைஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவில், ஊட்டி மலைரயில், கொடைக்கானல், முதுமலை சரணாலயம் உள்ளிட்ட பலதரப்பட்டசுற்றுலாத்தலங்கள் தமிழ்நாட்டிற்கு உலகம் முழுவதும் உள்ளசுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலசுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சர்வதேச பலூன்திருவிழா, சர்வதேச பட்டம் விடும் திருவிழா, சென்னை திருவிழா, மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா உள்ளிட்ட பல்வேறுவிழாக்களை நடத்தி வருகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள பழமையான சுற்றுலாத்தலங்கள், கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள் குறித்த கழுகுக்கண் பார்வை (TOP ANGLE VIEW) அனுபவத்தையும், சுற்றுலா பயணிகள் நேரில் சென்றுபார்வையிட்டதைப் போன்ற அனுபவங்களையும் தரும் வகையிலானகுறும்படங்கள் உலகமெங்கும் உள்ள சுற்றுலா பயணிகளை எளிதில்சென்றடையும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் யூடியூப், பேஸ்புக், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறுசமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகின்றன.

அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைதமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாஏற்பாட்டாளர்கள் பங்கு பெறும் இந்திய அளவிலான பயண சுற்றுலாசந்தைகள், வெளிநாடுகளில் நடைபெறும் புகழ்பெற்ற பயணசுற்றுலா வர்த்தக சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் தமிழ்நாடுசுற்றுலாத்துறையின்  அரங்கம் அமைக்கப்பட்டு சுற்றுலாசிறப்புகளை தெரிவிக்கும் குறும்படங்கள் திரையிடப்பட்டும்,புத்தகங்கள், சிறு கையேடுகள் ஆகியவை பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டும் கவன ஈர்ப்பு செய்யப்படுகின்றது.

இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக கொரோனாவிற்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 11,74,899  ஆகவும் உயர்ந்துள்ளது.  தமிழ்நாட்டிற்கு தற்போது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,24,318 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021 ல் 11,53,36,719 ஆக இருந்து 2022 ல் 21,85,84,846 ஆகவும், 2023 ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 17,96,27,146 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் 17.9.2024 தொடங்கி 19.9.2024 வரை நடைபெற உள்ள புகழ்பெற்ற ஐஃப்டிஎம்டாப் ரேசா 2024 ( IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தககண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கம்அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை நிலப்பகுதிகளில்அமையப்பெற்ற புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களை விளக்கும்வகையிலான அரங்கத்தில்  தமிழ்நாட்டின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் காளையைதழுவி நிற்கும் வீரனின் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை பிரஞ்சுமொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள்அடங்கிய புத்தகத்தினை சுற்றுலாத்துறை அலுவலர்கள்அரங்கத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலாதொழில் முனைவோர்களிடம் வழங்கினர். இந்த அரங்கத்தை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், சுற்றுலா தங்கும் விடுதி துறையினர், சுற்றுலா பயணஏற்பாட்டாளர்கள் பார்வையிட்டு தமிழ்நாட்டின் சிறப்புகளைஅறிந்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலாத்துறை உதவி இயக்குநர்திருமிகு.மோனிகா ஜாம்வால், இந்திய தூதரக அலுவலர்கள், சுற்றுலாத்துறை அலுவலர்கள், சுற்றுலாத் தொழில் முனைவோர்கள்கலந்து கொண்டனர்.