30 ஆவது தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சி -2023 டெல்லி கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்திய பொருட்காட்சி திடலில் 9.02.2023 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 11.02.2023 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சியில் இந்தியா, ரஷ்யா, ஹாங்காங், துபாய், பூட்டான், ஓமன், தாய்லாந்து, மாலத்தீவுகள், மலேசியா, கட்டார் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த அரசு சுற்றுலாத்துறை அரங்கங்கள், விமான போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், பயண ஏற்பாட்டாளர்கள் அரங்கங்கள் அமைத்துள்ளார்கள்.
தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அரங்கத்தில், சுற்றுலாத்துறையின் சுற்றுலா ஏற்பாடு, பயண ஏற்பாடு, விருந்தோம்பல், படகு சவாரி என அனைத்து அம்சங்களிலும் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, திருச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாஏற்பாட்டாளர்கள், விருந்தோம்பல் துறையில் சிறந்து விளங்கும் 27 நிறுவனத்தினர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
வந்தோரை வரவேற்று உபசரிப்பதில் பண்பாட்டு சிறப்புடைய தமிழ்நாட்டின், சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள்குறித்து, தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை அரங்கத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம், தமிழ்நாடு அரசின்சுற்றுலாத்துறை இயக்குர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக அலுவலர்கள் மற்றும் தனியார் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்து, தமிழ்நாட்டில்சுற்றுலா பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்கள். (தமிழ்நாட்டின் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் அதிகவெளிநாட்டவர்களால் பார்வையிடப்படும் இந்தியாவின் முதன்மை சுற்றுலாத்தலமாக உள்ளதுகுறிப்பிடத்தக்கதாகும்.)
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திருப்பதிசுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா பயணங்கள், பண்பாட்டு தலங்களுக்குசுற்றுலா, தமிழ்நாடு சுற்றுலா என 52 வகையான பல்வேறு சுற்றுலா பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதுடன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் வால்வோ குளிரூட்டப்பட்ட பேருந்துகள், ஹை–டெக் சொகுசுபேருந்துகள் மூலமாக சுற்றுலா வழிகாட்டி வசதியுடன் சுற்றுலா பயணங்களையும் ஏற்பாடு செய்து அளித்துவருகின்றது. மேலும் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு என்றஅமுதகம் உணவு விடுதிகளை நடத்தி வருவதன் மூலம் விருந்தோம்பல் துறையில் சிறந்து விளங்கி வருகின்றது. ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றம் அமுதகம் உணவு விடுதிகள் முக்கிய நகரங்களில் பேருந்துநிலையங்களின் அருகில் அமைந்துள்ளது குறைந்த செலவில் எளிய முறையில் சுற்றுலா பயணம்மேற்கொள்பவர்களுக்கு அருமருந்தாக அமைந்துள்ளது. மேலும் தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா பயணம்மேற்கொள்ள https://www.ttdconline.com/ என்ற இணையதள முகவரியின் மூலம் இருக்கும் இடத்தில்இருந்தே பதிவு செய்யும் வசதியையும் செய்துள்ளது. Tamilnadu tourism –ன் யூ– டியூப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமுக வலைதளங்களின் மூலம் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்கள், ஓட்டல் தமிழ்நாடுதங்கும் விடுதிகளின் சிறப்புகள் குறித்த குறும்படங்கள், விழாக்கள் குறித்த வீடியோ தொகுப்புகளைபொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்துள்ளது.
தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கத்திற்கு வருகை தந்தசுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள்குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த பொருட்காட்சியில் 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுதமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகள் குறித்து அறிந்து கொண்டனர்.