செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் நடைபெற உள்ள நாட்டிய விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனர் / மேலாண்மை இயக்குநர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.வெ.நாராயண சர்மா இ.ஆ.ப., மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர்கள் உடன் இருந்தனர்.