தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் ரூ.5கோடி செலவில் உணவகக் கப்பல்

முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால் சுற்றுலா வளர்ச்சிக்காக 1971 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு முழுவதும் 26 உணவகங்கள் தமிழ்நாடு தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில் 9 படகு குழாம்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி மேற்கொள்ள சேவை அளித்து வருகின்றது. 3 தொலைநோக்கி இல்லங்களையும் செயல்படுத்தி வருகின்றது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வளர்ச்சி  மேலும் உயர்த்தும் வகையில் 07.01.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகள் கொண்ட 3000 சதுர அடி பரப்பளவுக் கொண்ட இப்படகு உணவாகம் 100 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வசதிகளுடன் கூடிய கருத்தரங்குகள், அலுவலக கூட்டரங்குகள்,  பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கேளிக்கை விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக வடிவமைக்கப் பட்டுள்ளது.  தமிழ் நாடிலேயே முதல் முறையாக சென்னையில் ஒர் புதுமையான அனுபவத்தை தந்திட தனியார் நிறுவனத்தின் பங்களிபுடன் மிதவை படகு உணவம் பொது மக்களின் பயன்பாடிர்க்காக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும்  சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். உடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர். சந்தர மோகன் இ.ஆ.ப., சுற்றுலா ஆணையர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப.,  செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.