சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த மாவட்ட சுற்றுலா அலுவலர்களிடம் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். சுற்றுலாத்துறை பொழுதுபோக்கு சுற்றுலா, பாரம்பரியசுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவச்சுற்றுலா என பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்த அனைத்து வகைகளிலும் தமிழ்நாட்டில்சிறப்பான வாய்ப்புகள் உள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடுஇந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கின்றது.
தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு குறைந்தசெலவில் அதிநவீன, தரமான, சிறப்பான மருத்துவத்தை அளித்து வருவதால் மருத்துவச் சுற்றுலாவில் இந்தியாவில் முதலாவது மாநிலமாக திகழ்கின்றது. தற்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்லும் இடங்களில் நீங்காத அனுபவங்களை அளிக்கும் மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீர்சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபங்களை மேற்கொள்ள விரும்புகின்றார்கள். இவை தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன.
முதலமைச்சர் சுற்றுலாவை தொழிலாக அங்கீகரிக்கும் வகையில் சுற்றுலாகொள்கையை வெளியிட்டுள்ளார்கள். இதனால் தனியார்துறையினர் சுற்றுலாத்துறையில் அதிக அளவில் பங்கேற்கவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா பயணிகளைஈர்க்கும் வகையில் தனியாருடன் இணைந்து பட்டம் விடும்திருவிழா, பலூன் திருவிழாக்களை நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு 10 க்கும் மேற்பட்ட பலூன்கள் பங்கேற்புடன்சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வெப்பக் காற்று பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் பேசுகையில், “சுற்றுலாத்துறை மூலம் தமிழநாட்டில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை விரைவில் முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுரைகளை வழங்கினார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள சுற்றுலா கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அதி. அளவில் சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் பணிகளை மேற்கொள்வோம். தமிழ்நாடு முதலமைச்சரின் 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற லட்சிய இலக்கினை அடைய, சுற்றுலாத்துறையின் பங்களிப்பு முதன்மையாக இருக்கும் வகையில் பணியாற்றி. சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அவ்விடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகபொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மற்றும் சுற்றுலா ஆணையரக உயர் அதிகாரிகள், ஆனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் மற்றும் சுற்றுலாத்துறை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.