தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம்3 நாட்கள் திருச்செந்தூர், இராமேஸ்வரம், சுற்றுலாசென்னை வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக சுற்றுலா வளாகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு புறப்பட்டுதிருச்செந்தூர், உத்திரகோசமங்கை மற்றும்இராமேஸ்வரம், சென்று திங்கட்கிழமை காலைசென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தைவந்தடையும்.
மேற்கண்ட சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் திருசெந்தில் ஆண்டவர் திருக்கோவிலில் சிறப்பு தரிசனம்.
உலகிலேயே முதலில் தோன்றிய முதல் கோவில் இராமநாதபுரத்தில் அமைந்து இருக்கும்உத்திரகோசமங்கை, மங்களநாதர் கோவிலில் சிறப்புதரிசனம் .
தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும்இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமிதிருக்கோவிலில் சிறப்பு தரிசனம் இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் இதன் சிறப்பு அம்சம் ஆகும். மேலும் இச்சுற்றுலாவில் தனுஷ்கோடியினை சிறப்புபார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளில் ஆன்மிகசுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதிகள் மற்றும் 3வேளை உணவும் வழங்கப்படும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதளபக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில்செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும்முன்பதிவு செய்யலாம்.
மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக தொலைபேசி எண்களை(180042531111 ) (Toll Free). 044-25333333 மற்றும் 044-25333444 தொடர்பு கொண்டு பெறலாம்.