சென்னைத் தீவுத்திடலில் தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு குறித்த  இரண்டு சக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  இரண்டு சக்கர மோட்டார் வாகன பேரணி துவக்க நிகழ்ச்சி இன்று (25.02.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, ..., அவர்கள் இரு சக்கர மோட்டார் வாகனபேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இரண்டு சக்கர மோட்டார் வாகன பேரணியானது சென்னைத்தீவுத்திடலில் தொடங்கி, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் வழியாக முதலியார் குப்பம் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் படகு குழாமை சென்றடையும். இந்த பேரணியில் 120 க்கும் மேற்பட்ட இரண்டுசக்கர மோட்டார் வாகன ஓட்டுநர்கள் தங்களது வித, விதமான இரண்டு சக்கர மோட்டார் வாகனத்துடன்கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பணியைமேற்கொண்டார்கள்இந்நிகழ்ச்சியில் சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர்திரு.சந்தீப் நந்தூரி, ..., அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்  தெரிவித்ததாவது,

 

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை சுற்றுலாத்துறையில் முக்கியத்துவம்வாய்ந்த மாநிலமாக உருவாக்கி வருகின்றார்கள். அதனடிப்படையில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடுமலை ஆகிய முக்கிய மலைப்பகுதி சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்றுவருவதைப்போல்,  கொல்லிமலை, ஏலகிரிமலை, ஜவ்வாதுமலை ஆகிய மலைகளுக்கும்  அதிக அளவில் செல்லும் வகையில்சுற்றுலாத்துறையின் சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாபயணிகளுக்கு நிறைவான மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தும் வகையில் சாகச சுற்றுலாமேம்பாட்டு பணிகள் இந்த மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்தலங்கள்குறித்தும், போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இரண்டு சக்கரமோட்டார் வாகன பேரணியானது நடத்தப்படுகின்றது. கொல்லிமலை மலைப்பாதை இந்திய அளவில் சிறந்த சாலையாக திகழ்கின்றது. இரண்டு சக்கரமோட்டார் வாகன சுற்றுலா பயணம் செல்பவர்கள் கொடைக்கானல் மலைக்கு அதிக அளவில் சுற்றுலாசெல்கின்றார்கள். தமிழ்நாட்டின் அனைத்து சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளையும் பொதுமக்கள்தெரிந்து கொள்ளும் வகையில் கடந்த ஓராண்டில் 100 க்கம் மேற்பட்ட வீடியோ குறும்படங்கள்தயாரிக்கப்பட்டு, யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக உலகம் முழுவதம் உள்ளசுற்றுலா பயணிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று சுற்றுலா இயக்குநர் மற்றும்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.