தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழ்நாடு பயணச்சந்தையை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இப்பயணச்சந்தையின் இரண்டாம் நாளான மார்ச் 22ம் தேதி பிற்பகல் முதல் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மாநிலத்தின் வளமான மற்றும் மாறுபட்ட சுற்றுலா வாய்ப்புகளை வெளிப்படுத்தவும், தொழில்துறை ஒத்துழைப்பை வளர்க்கவும், சுற்றுலாத் துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் இந்த நிகழ்வு ஒரு முதன்மை தளமாக செயல்படும்.
தமிழ்நாடு பயணச்சந்தை நிகழ்விடத்தில், Travel and Tourism Fair அமைப்பின் மூலம் பயணச்சந்தை நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும். இதில் தெலுங்கானா, உத்தரகண்ட், தமிழ்நாடு சுற்றுலாத்துறை, நோப்பால் டூரிஸம், ஆந்திரப்பிரேதேசம் டூரிஸம், டெல்லி டூரிஸம், இந்தியா டூரிஸம், ஜார்கண்ட் டூரிஸம், கோரளா டூரிஸம், பன்ஜாப் டூரிஸம், உள்ளிட்ட மாநில அரசு சுற்றுலாத்துறை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளதால் பயணச்சந்தைக்கு வருகை புரியவர்களுக்கு சிறந்த அனுபவமாக விளங்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியால் தமிழநாட்டில் சட்ட ஒழுங்கு அமைதி பூங்காவாக திகழ்வதால் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வதால் தமிழ்நாட்டிற்க்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்து, நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு பயணச்சந்தையும் ஒரு சிறந்த முன்னெடுப்பாகும். இப்பயணச்சந்தையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் பயண முகவர்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சார்ந்த தொழில் முனைவோர் ஆகியோர் கலந்துகொண்டு, சுமார் 115 அரங்குகள் அமைத்துள்ளனர். மேலும் இப்பயணச்சந்தைக்கு சிங்கப்பூர், மலேசியா, அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, துருக்கி, ஆகிய அயல்நாடுகள் மற்றும் 32 உள்நாட்டு முகவர்கள் மற்றும் முதலிட்டாளர்கள் பங்குபெற்று தமிழ்நாட்டு முகவர்களுடன் தொழில் சார்ந்த கலந்துரையாடல் மேற்கொள்வர்.
தமிழ்நாடு சுற்றுலாப் பயணச்சந்தை 2025, பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், விருந்தோம்பல் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்களை ஒன்றிணைத்து, மாநிலத்தின் விரிவான சுற்றுலா வாய்ப்புகளை கண்டறியும். பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா மற்றும் ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) போன்ற முக்கிய பிரிவுகளில் வளர்ந்து வரும் போக்குகள், பிராந்திய மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விவாதங்களுக்கு இந்த நிகழ்வு வழிவகுக்கும்.
மாநிலத்திலேயே முதன்முறையாக செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023, சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இக்கொள்கை, ஒற்றைச் சாளர முறையின் மூலம் தனியார் துறையின் பங்கேற்பை நெறிப்படுத்துவதுடன், தற்போதுள்ள தனியார் மற்றும் தனியார் மற்றும் தனியார் மற்றும் தனியார் பங்களிப்பு சுற்றுலாத் திட்டங்களை திறம்பட கண்காணிப்பதை உறுதி செய்கிறது. தகுதியான சுற்றுலாத் திட்டங்களுக்கு ஒப்புதல்களை வழங்குவதன் மூலமும், உறுதியளிக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும் சுற்றுலா மேம்பாட்டுப் பிரிவு முதலீட்டாளர்களுக்கு மேலும் ஆதரவளிக்கிறது இந்த பயணச்சந்தை நிகழ்வு தமிழ்நாட்டின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், முற்போக்கான முயற்சிகளை காட்சிப்படுத்தும்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை தொடர்ச்சியாக சர்வதேச அளவில் நடத்தப்படும் முக்கிய வெளிநாட்டுப்பயணச் சந்தையான “IFTM-Top Resa 2024”,பாரீஸ் மற்றும் உலக பயணசந்தை (WTM) 2024 லண்டன் ஆகியவற்றிலும், உள்நாட்டு பயணச்சந்தைகளான தக்ஷிண்பாரத் உத்சவ் 2024-FKCCI பெங்களூரு,(OTM) மும்பை மற்றும் இந்தியா இன்டர்நேஷனல்டிராவல் மார்ட் (IITM), சென்னை ஆகியவற்றிலும் தொடர்ச்சியாக பங்கெடுத்து தமிழகத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தவும், நமது துடிப்பான கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் நிலை நிறுத்தவும் செயலாற்றி வருகிறது. உத்திசார் முன்முயற்சிகள் மற்றும் வலுவான கொள்கை ஆதரவின் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு பயணச் சந்தை 2025, புதிய வணிக வாய்ப்புகளை வெளிப்படுத்துவதுடன், தொழில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதுடன், மாநிலத்தின் பார்வையை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணச்சந்தை திறப்பு விழா நிகழ்வின்போது அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் தலைவர் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழகம் டாக்டர் க.மணிவாசன் இ.ஆ.ப., மற்றும் சுற்றுலா ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஷில்பாபிரபாகர் சதிஷ் இ.ஆ.ப., மண்டல இயக்குநர் (தெற்க்கு), இந்தியா டூரிஸம் D.வெங்கடேசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச.கவிதா, மேலாண்மை இயக்குநர், டி. டி. ஃப். Kகசண்பர் இப்ராஹீம், உடனிருந்தனர்.