முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு அரசு 1971 ல் தொடங்கப்பட்டு இதன் படிப்படியான வளர்ச்சியில் ஒரு சிறப்பம்சமாக நலத்திட்டங்கள் எளிதில் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதலாவது இந்திய சுற்றுலாமற்றும் தொழில் பொருட்காட்சி 1974ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 48 ஆண்டுகளாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, இந்தஆண்டும் பொருட்காட்சியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து, அரசுத்துறை அரங்கங்கள் அமைக்க ருபாய் 1.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த 06.01.2025 அன்று 49வது இந்திய சுற்றுலாமற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கப்பட்டு, 11.01.2025 அன்று முதல் பொதுமக்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து 72 நாட்கள. நடைபெற்ற இப்பொருட்காட்சியில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசின் அனைத்து துறைகளின் நல த்திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் பொது மக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் சுற்றுலாத்துறை, காவல்துறை, விளையாட்டுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை, நான்முதல்வன், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, நீர்வளத்துறை, மாற்றுத் திறனாளிகள்நலத்துறை, வருவாய்த்துறை, சிறுசேமிப்புத்துறை, பெருநகர சென்னைமாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக்குழு, தமிழ்நாடுமாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 41 மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அரங்குகள், இரண்டு ஒன்றிய அரசின் அரங்குகள் (சென்னைதுறைமுகம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்ரேசன்) உள்பட 43 அரங்குகள் சிறப்பானமுறையில் அமைக்கப்பட்டு அரசின் சிறப்பு செயல்பாடுகளையும், மக்கள்நலனுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும்வகையில் செயல் மாதிரிகளுடன் அரங்கங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குவிளக்க மளித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்பொருட்காட்சியில் 110 சிறிய வணிக கடைகள், 30 தனியார்அரங்குகள், 15க்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. டெல்லிஅப்பளம், பஜ்ஜி, ஐஸ்கிரிம், கரும்பு சாறு, பானிபூரி, பால்கோவா, காலிபுளவர்பக்கோடா, சோளாபூரி போன்ற சிற்றுண்டி உணவுவகைகளும் பொதுமக்கள் உண்டுமகிழ்ந்தனர், 80,000 சதுர அடிபரப்பளவில் 32க்கும் மேற்பட்ட இதுவரை கண்டிடாத, விளையாடி மகிழ்ந்திடாத விளையாட்டு சாதனங்கள்(Sunami,Chapsuel, Tora Tora, Giant wheel, Swing Chair, Octopus, Techno Jump, Screen Tower, Wind Mill and China Salambo) இடம்பெற்றது. இப்பொருட்காட்சி மூலம் நேரடியாக சுமார் 10,000 பேருக்கும், மறை முகமாகசுமார் 30,000 பேருக்கும் வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது.
இப்பொருட்காட்சியினை 5,50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்பார்வையிட்டு பயனடைந்துள்ளனர். இப்பொருட்காட்சியில் இடம் பெற்ற 43 அரசு அரங்குகளில் பொதுமக்கள்பார்வையிட்டு மகிழ்ந்த மிகச் சிறந்த அரங்குகளை பல்வேறு பிரிவுகளின் கீழ்தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றினை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், மருத்தும் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
அத்துறையினருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2025 நிறைவு விழா நிகழ்வின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆகியோர் அரசு துறை அரங்குகளில் சிறப்பாக செயலப்பட்ட அரசு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வின் போது மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை மற்றும் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர் க. மணிவசன் இ.ஆ.ப., சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., இந்து சமய அறநிலயத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைமை நிர்வாக அதிகாரி உறுப்பினர் செயலர் ஜே. மேகநாத ரெட்டி இ.ஆ.ப., விருதுகள் உடன் இருந்தனர்.