பிரியங்கா மோகனின் முதல் பதாகை வெளியானது

நடிகர் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும்  திரைப்படம்,   “சூர்யா’ஸ் சாட்டர்டே”   படத்திலிருந்து,  பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, முதல் பார்வை பதாகை  வெளியாகியுள்ளது. பான் இந்திய படைப்பாக உருவாகும் நடிகர்  நானியின்  “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு  ஜோடியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.  கேங் லீடருக்குப் பிறகு நானியுடன் அவர் நடித்த இரண்டாவது படம் இது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, பதாகையை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.********


நடிகர்கள்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே. சூர்யா, சாய் குமார்
தொழில்நுட்பக் குழு:  எழுத்து- இயக்கம் : விவேக் ஆத்ரேயா தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி  பேனர்: டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜேக்ஸ் பிஜாய்  ஒளிப்பதிவு : முரளி ஜி  எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ்  சண்டைப்பயிற்சி : ராம்-லக்ஷ்மன்  மக்கள் தொடர்பு : யுவராஜ்  மார்க்கெட்டிங் : வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்