அனைத்து வேதங்களையும் படித்தால் “ஒரே கடவுள்” எனும் நிலைக்கு வழிவகுக்கும் – மனுஜோதி ஆசிரம நிர்வாகி பால் உப்பாஸ் என். லாறி

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் விசாகப்பட்டினத்தில் உள்ள குரு ஜாடா  கலாஷேத்திரத்தில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுகின்ற மக்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில்  மனுஜோதி ஆசிரம நிர்வாகி பால் உப்பாஸ் என். லாறி  பேசினார்.   அப்போது அவர்: ஸ்ரீ லஹரி கிருஷ்ணா எங்கள் மனுஜோதி ஆசிரமத்தை 1963 -ல் நிறுவினார்.  மனுஜோதி என்றால் “மனித குலத்திற்கு வழங்கப்படும் தெய்வீக ஒளி”.   ஜாதி, மதம், இனம், மதம் மற்றும் மொழி எனும் பாகுபாடு இன்றி எளிமையான வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பதை அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். அதை ஸ்ரீ லஹரி கிருஷ்ணா தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார்.  எல்லா வேதங்களிலுள்ள ரகசியங்களையும், அவற்றின் ஒற்றுமையும்  நமக்குக் கற்றுக் கொடுத்தார்.   இவை அனைத்தும் ஒரே கடவுள் எனும் நிலைக்கு வழிவகுக்கும் காரியங்கள் ஆகும்.  மனிதன் தனது தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மக்கள் மத்தியில் பிரிவினைகளைக் கொண்டு வருகிறான். ஆகவே அனைத்து வேதங்களையும் படித்து ஒற்றுமையாக இருக்க கற்றுணர வேண்டும்.

நமது ஆன்மா மிகவும் முக்கியமானது, அதற்கு நாம் கடவுள் பக்தியுடன் இருக்க வேண்டும். கடவுளின் பிள்ளைகளாகிய நாம் சத்தியத்தின் பாதையில்  மனதார நடக்க வேண்டும்.   ஆனால் இந்த கலியுகத்தின் முடிவில் நம் கண்கள் மூடப்படுகின்றன.   ஆனால் கடவுளின் அருளும் கருணையும் நமக்கு எப்போதும் நித்திய அமைதி மற்றும் மகிழ்ச்சியைத் தருகின்றன. எனவே ஜாதி, மதம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு வரவும், ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளைப் புரிந்துகொண்டு ஒரே கடவுள் ஒரே தேசத்தின் கீழ் ஒன்றிணையவும் விரும்புகிறோம்.

உலகம் முழுவதிலும்  ஆன்மீக பூமி என்பது நமது இந்தியா தான். இந்தியா பார்வைக்கு ஏழைநாடாகத் தெரியலாம்.  ஆன்ல் இந்த புண்ணிய பூமியிலிருந்து தான் பல அவதாரங்கள், தீர்க்கதரிசிகள், ரிஷிகள், முனிகள் வந்திருக்கிறார்கள்.   ரவீந்திரநாத் தாகூர் நமது தேசிய கீதத்தில் இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் உள்ளது என்று கூறுகிறார். நமது நாடு மொழிகள் மற்றும் மதங்களால் பிரிக்கப்பட்டுள்ளது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்று நாம் ஆன்மீக ரீதியில் இல்லை. வேதங்கள், புராணங்கள், கிரந்தங்கள், பகவத் கீதை, புனித குரான் மற்றும் பைபிள் அனைத்தையும் நாம் படிக்க வேண்டும்.   இந்த வேதங்களைப் படிக்கும் போதுதான், அதிலுள்ள தெய்வீக எண்ணங்களைப் புரிந்துகொள்கிறோம். நம் வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ஒரே கடவுளைப் பின்பற்றும் சமுதாயத்தை உருவாக்க முடியும். எந்திரகதியில் இயங்கும்  மக்களுக்கு இந்தப் பாடல்கள் அதற்கு உபயோக இருக்கும் மற்றும் சத்தியத்தை அறிவிக்கும்.  மனுஜோதி ஆசிரமானது இறைவனின் பாதையில் நடக்க வழிகாட்டுகின்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை நாங்கள் பாடல் வடிவில் இன்று வெளியிடுகிறோம். மனுஜோதி ஆசிரமானது அனைவரையும் வரவேற்கிறது.

நாங்கள் மனுகுலத்திற்கு ஜோதியாகிய ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை மனுஜோதி எனும் புத்தகம் மற்றும் பல ஊடகங்கள் மூலமாக வெளியிட்டு வருகின்றோம். தேவைப்படுவோர்  மனுஜோதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார். இந்நிகழ்வில்  பாடகர் பத்மஸ்ரீ அனுப் ஜலோட்டா மற்றும் சாதனா சர்கம் அவர்களின் வாழ்த்து செய்தி அரங்கில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பிலாய், அசாம், ஒடிசா, தமிழ்நாடு, அமெரிக்கா, ஆந்திரா, டெல்லி இன்னும் அனேக இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆந்திர மாநில பக்தர்கள் ஒன்றுகூடி செய்திருந்தார்கள்.