கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழா

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம்பெறும் ‘உலகளாவிய பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் பெருவிழாவில் எண்பது பெண்மணிகள் கௌரவிக்கப்படவுள்ளனர். இலங்கையில் பல்வேறு மாகாணங்களில் வாழும் பெண்மணிகளுள் கலை இலக்கியம் சமூக சேவை. நாடகம். சினிமா. சமயப் பணி போன்ற துறைகளில் மிகுந்;த ஈடுபாட்டுடன் பங்காற்றி வரும் வெற்றியாளர்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட வுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுகள் வழங்கும் விழாவையும் யூன் மாதத்தில் கனடாவில் நடைபெறவுள்ள தமிழ் பிரபஞ்ச அழகி-2022 – MISS TAMIL UNIVERSE-2022-இற்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்விற்காகவும் தற்போது கொழும்பிற்குச் சென்றுள்ள நிறுவனத்தின் ஸ்தாபகரும் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் தலைவி திருமதி சசிகலா நரேன் மற்றும் அவரது குழுவினர் ஆகியோர் இரண்டு நிகழ்வுகள் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
இங்கு காணப்படும் படங்களில் இலங்கை ‘சக்தி’ தொலைக்காட்சி மற்றும் ‘சக்தி எப்எம்’வானொலி ஆகியவற்றின் முகாமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் சந்திப்புக்கள் இடம்பெறுகையில் எடுக்கப்பட்டவையாகும்.
 
மேற்படி இரண்டு பெரு நிகழ்வுகளுக்கும் இலங்கையின் வீரகேசரி நாளிதழ். சக்தி தொலைக்காட்சி. கனடாவின் உதயன் வார இதழ் மற்றும் கனடா சங்கர் நல்லதம்பி அவர்களின் நிறுவனம் ஆகியவை பிரதான அனுசரணையாளர்களாக உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது