இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தில்லி தமிழ்ச்சங்கம், தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.02.2023 மற்றும் 28.02.2023 ஆகிய இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (27.02.2023) தில்லி சென்றார்.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை தில்லி தமிழ்நாடு இல்லத்தில் இன்று (27.02.2023) தில்லி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.சக்தி பெருமாள் அவர்கள், துணைத் தலைவர் திரு.இராகவன் நாயுடு அவர்கள், பொதுச்செயலாளர் திரு.ஆர்.முகுந்தன் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு.கோவிந்தராஜன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

தொடர்ந்து, தில்லி முத்தமிழ்ப் பேரவை தலைவர் திரு.ஆர்.சத்தியசுந்தரம், இ.கா.ப., அவர்கள், பொதுச் செயலாளர் திரு.என்.கண்ணன் அவர்கள் மற்றும் பொருளாளர் திரு.ஆர்.வெங்கடேசன் ஆகியோர்  மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

அதனைத் தொடர்ந்து, தில்லி தமிழ்க் கல்விக் கழக (Delhi Tamil Education Association) பொதுச் செயலாளர் திரு.ஆர்.ராஜூ அவர்கள், துணைத் தலைவர் திரு.ரவி நாயக்கர் அவர்கள்  மற்றும் பள்ளி முதல்வர்கள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் தில்லி தமிழ்நாடு urசிறப்பு பிரதிநிதி திரு. ஏ.கே.எஸ். விஜயன் அவர்கள், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கவுதம் சிகாமணி அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.