இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று(03.03.2023), நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ஜங்களாபுரத்தில் நடைபெற்ற மாபெரும்ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், ஜல்லிக்கட்டு வீரர்கள் தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான விதிமுறைகளுக்குட்பட்டு, அனைத்து விதிமுறைகளையும், முறையாக கடைபிடித்து, ஜாதி, இன, வட்டாரப்பாகுபாடின்றி அனைத்து வீரர்களும், ஒற்றுமையாக செயல்பட்டு, காளைகளை துன்புறுத்தாமல், அமைதியாகஜல்லிக்கட்டை விளையாடுவோம் என்று உறுதி ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் 400 காளைகள்வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கான 70 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, 5 நடமாடும் மருத்துவமனை, காளைகளுக்கான கால்நடை மருத்துவர்கள் குழு, காவல் துறையினர் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள மாற்றுத்திறன் கொண்டகுழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாமை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாற்றுத்திறன் கொண்டகுழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், பயிற்றுவிக்கும் முறைகள், குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், பாராளுமன்றமாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஸ்ரேயா பி.சிங், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.