சென்னையைச் சார்ந்த திருமதி என்.முத்தமிழ்ச் செல்வி அவர்கள் 2023-ஆம் ஆண்டு “ஏசியன் டிரக்கிங்இன்டர்நேஷனல் நிறுவனம் ” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்டகுழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறிசாதனை செய்ய திட்டமிட்டு 02.04.2023 – அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு நேபாளம் சென்றார். நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறுநாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். முத்தமிழ்செல்வி அவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிசாதனை செய்ய தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.
இவர் 2023- ஏப்ரல் 2- ந்தேதி சென்னையிலிருந்து காட்மாண்டு சென்றார். ஏப்ரல் 5-ந்தேதி கேம்பிற்கு(started to Base camp) பயணத்தை தொடங்கினார். ஏப்ரல் 19- ந்தேதி லோபுச் பகுதி உயரத்தை(20075அடி – 6119 – மீட்டர் உயரம்) (LOBUCHE PEAK SUMMIT -20075 feet – 6119 meter) அடைந்தார். மே-18-ந்தேதி மவுண்ட் எவரெஸ்டக்கு பயணத்தை தொடங்கினார். மே-23-ந்தேதி மவுண்ட்எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார். (MOUNT EVEREST SUMMIT -29035 FEET-8848.86 METER completed successfully). மே-24-ந்தேதி கேம்ப்-2- க்கு வந்து சேர்ந்தார்.
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமைசேர்த்த முத்தமிழ்செல்வி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாண்புமிகு இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துக்களைதெரிவித்தார். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
சென்னையைச் சார்ந்த திருமதி என்.முத்தமிழ்ச் செல்வி அவர்கள் எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்கநிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களிடம் முத்தமிழ் செல்வி அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூபாய் 10-இலட்சத்திற்கான காசோலையினை 28/03/2023-அன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இந்நிலையில் சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வல அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூபாய் 15-இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.