புவனேஸ்வர் ராஜீவ் பவனில் உள்ள சிறப்பு மீட்பு ஆணையர் அலுவலகத்தில்ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் குமார் ஜெனா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அலுவலர்களுடன் நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மீட்புப் பணிகள், மருத்துவ வசதிகள், சிகிச்சையில் உள்ளோர், சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியோர் உள்ளிட்ட விவரங்களைகேட்டறிந்தார்.
மேலும், புவனேஸ்வர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றமாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ். எஸ். சிவசங்கர் அவர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினரிடம், இரயில் விபத்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள் மற்றும் விவரங்கள் குறித்து அலுவலர்கள்எடுத்துரைத்தனர். போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறுமாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்அவர்கள், அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.