“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1425 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவுத்திட்டமானநான் முதல்வன்திட்டத்தின் கீழ்திறன் பயிற்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்10.06.2023 அன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மாநில அளவில் தேர்வுசெய்யப்பட்ட 1425 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்வழங்கினார்.

விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பேசும்போது :-மாணவர்களுக்கு துறைசார்ந்த திறன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமென்ற நோக்கில் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான திட்டம்நான் முதல்வன்திட்டம். இத்திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில்பயிற்சிகள் வழங்கி அவர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றதொலைநோக்குடன் துவங்கப்பட்ட ஓராண்டிலேயே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில்13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து நான் முதல்வன் திட்டம் சாதனைபுரிந்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் துவங்கப்பட்ட இத்திட்டம்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் என உயர்கல்வி பயிலும் அனைத்துமாணவர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அந்தந்த கல்லூரிவளாகங்களிலேயே வழங்கி வருகிறது. இத்தகைய திறன் பயிற்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் பொறியியல்கல்லூரிகளில் இதுவரை நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு முகாம்களில் 64,943 மாணவர்கள்பணிவாய்ப்பு பெற்றுள்ளார்கள் என்பதையும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  78,196 மாணவர்கள்பணிவாய்ப்பு பெற்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இம்மாதம் இறுதிவரை இதுபோன்ற முகாம்கள்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த  வேலைவாய்ப்பு முகாமில் செயின்ட் கோபின் (Saint Gobain), மைக்ரோ சாப்ட் (Microsoft SAP, Edunet), மிஸ்டர் கூப்பர் (Mr.Cooper),
டெக் மகேந்திரா (Tech Mahindra), ஆதித்யா பிர்லா (Aditya Brila Group), பைஜீஸ் (Byju’s), பிளிப்காட்(Flipcart), ஹெச்டி எப். சி. (HDFC), ஐசிஐசிஐ ( ICICI), இந்தியா சிமென்ட்ஸ் (India Cements), பாக்ஸ்கான் (FoxCon) முத்தூட் பைனான்ஸ் (Muthoot Finance), சுதர்லேன்ட் (Sutherland), ஸ்டார் ஹெல்த்(Star Health Alliance ) போன்ற முன்னணி நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1425 பேருக்குபணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் மருத்துவம்,மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் மற்றும்சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை  செயலாளர் திரு. ககன் தீப் சிங் பேடி, .. அவர்கள் தமிழ்நாடுதிறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெ..இன்னசென்ட் திவ்யா ..., அவர்கள், நான் முதல்வன் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர்..ஜெயபிரகாசன் அவர்கள் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.