இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-62க்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் சிங்காரசென்னை 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் 102 கடைகளுடன் புதிதாக நவீன மீன்அங்காடி கட்டடம் கட்டும் பணியினை  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (10.07.2023) தொடங்கி வைத்தார்.  இதனைத்தொடர்ந்து, இந்த நவீன மீன் அங்காடி கட்டுவதற்கான திட்ட வரைபடத்தினை மாண்புமிகு இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு இப்பணிகளை குறித்த காலத்தில்முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 இராயபுரம் மண்டலம், வார்டு-62க்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும்பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் 1,247 .மீ. பரப்பளவுள்ளஇடத்தில் 1,022 .மீ. பரப்பளவில் 102 கடைகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி கட்டடமானது கட்டப்படஉள்ளது.  இந்தக் கட்டடமானது, புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல்கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் சுத்திகரிப்பு நிலையம், குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டி பலகைகள், மீன் கழிவுநீரினை பயோடைஜிஸ்ட்க்கு கொண்டு செல்ல பிரத்யேக வடிகால் மற்றும் வாகன நிறுத்தம் போன்ற அம்சங்களுடன்அமைக்கப்பட உள்ளது.

 இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்அவர்கள் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-115க்குட்பட்ட பீட்டர்ஸ் சாலையில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டில்கட்டப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

 இந்த மழைநீர் வடிகாலானது பீட்டர்ஸ் சாலையில் நியூ காலேஜ் பகுதியிலிருந்து கான்ரான்ஸ்மித் சாலை வரை, மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து கான்ரான்ஸ்மித் சாலை வரை 696 மீ. நீளத்திலும், ஆர்..பி. 6வது தெருவில் 113 மீ. நீளத்திலும் அமைக்கப்பட்டு வரும் விவரத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து, இப்பணிகளை தரமாகவும், வடகிழக்குப்பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி        ஆர். பிரியா, துணை மேயர் திரு. மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், ..., இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், ..., வட்டார துணை ஆணையாளர்கள் திரு. எம்.சிவகுரு பிரபாகரன், ..., (வடக்கு), திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், ..., (தெற்கு), நிலைக்குழுத் தலைவர் (பணிகள்)              திரு. நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள்  திரு. ரா. ஜெகதீசன் மற்றும் திருமதி வெ. ஈஸ்வரி வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.