தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங்அசோசியேஷன் (TNSA), இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் (SFI) இணைந்து, இந்தியாவில் முதன் முறையாக, சர்வதேச சர்ப் ஓப்பன்தமிழ்நாடு (International Surf Open – Tamil Nadu ) நடைபெறுகிறது. இந்தபெருமைக்குரிய நிகழ்வானது  வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் 2023 ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச அலைச்சறுக்கு போட்டி (WSL – INTERNATIONAL SURF OPEN – TAMILNADU) தொடக்கவிழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,

மாண்புமிகு குறு, சிறு, நடுத்தர  தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.  தா .மோ. அன்பரசன் அவர்களே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல்  தலைமைச்செயலாளர், முனைவர்.அதுல்யமிஸ்ரா ..., தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு ஜெ. மேகநாதரெட்டி,..., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு..ஆர்.ராகுல் நாத் ..., உலக சர்ஃபிங் லீக் ஆசியசுற்றுலா இயக்குனர் திரு.டை சொரட்டி, இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பு தலைவர் திரு அருண் வாசு, பொதுச்செயலாளர் திரு ஜெஹான் டிரவர், இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பின் தூதர் (பிராண்ட் அம்பாசிடர்) மதிப்பிற்குரிய ஜான்டி ரோட்ஸ், தமிழ்நாடு சர்ஃபிங் சங்க துணைத் தலைவர் திரு வீரா, பொதுச் செயலாளர் திரு. நவாஸ் ஜப்பார் மற்றும் அன்பான சர்ஃபிங் வீரர்களே, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

சர்வதேச அலைசறுக்கு  லீக்  QS 3000 போட்டி 2023 மாமல்லபுரத்தில் நடைபெறுகின்ற இந்த சிறப்பானதருணத்தில், நாம் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளோம். 2023 ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பை போட்டியினை சென்னையில் வெற்றிகரமாக நடத்தியுள்ளநிலையில், உடனடியாக இந்த போட்டியினை சிறப்பாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹாக்கி போட்டி முடிவுற்ற மறுதினமே இந்த சர்ஃபிங் போட்டியினை நடத்துவது, தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் சிறப்புமாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஈடுபாடின்றி இதுபோன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவது இயலாது. அதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் முதல்முறையாக QS 3000 சர்ஃப் லீக் போட்டி தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நாளை (14.8.2023) முதல் 20.8.2023 வரை நடைபெறுவதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முழுமனதுடன் இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காகதமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2.68 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளார்கள். இந்த சிறப்புமிக்க தொடரில் 12 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச அளவிலான 39 வீரர்கள், 14 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தபோட்டியில் பங்கேற்கின்ற 15 இந்திய வீரர்களில் 12 வீரர்கள் தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளில் பெறுகின்ற புள்ளிகள் அடுத்து வருகின்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தகுதி பெற ஏதுவாகஅமையும்.  இந்த தொடர் தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும். தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் 2023 – 24  பட்ஜெட்டில் இராமநாதபுரத்தில்தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் அனைத்து வசதிகளை மேம்படுத்தவும், தமிழ்நாடு சாம்பியன்ஸ்அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையின் மீது தமிழ்நாடு அரசிற்குள்ள அர்பணிப்பினை வெளிகாட்டும் விதமாக முதலமைச்சர்கோப்பை 2023  போட்டி நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள்நடத்தப்பட உள்ளன.

இந்த உலக சர்ஃபிங் போட்டியை தொடர்ந்து அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் ஹெச்.சி.எல்நிறுவனத்துடன் இணைந்து சைக்ளோத்தான் போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளது. கேலோ இந்தியாஇளைஞர் விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதைபெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போட்டிகள் ஜனவரி 2024 ல் நடத்தப்பட உள்ளன. விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்முயற்சிகளுக்கு, விளையாட்டுதுறையில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தேசிய அளவில் நடைபெற்ற சர்ஃபிங் போட்டிகளில் 16 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில்வெற்றி பெற்ற கமலிக்கு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சர்ஃபிங் பலகையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்திரு..மோ.அன்பரசன் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா ..., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையஉறுப்பினர் செயலர் திரு.ஜெ. மேகநாத ரெட்டி ..., அவர்கள் இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பின் தலைவர்திரு.அருண் வாசு, துணைத்தலைவர் திரு. ராம் மோகன், பொதுச் செயலாளர் திரு.ஜெகன், தமிழ்நாடு சர்ஃபிங்சங்கத் துணைத்தலைவர் திரு.வீரா, பொதுச்செயலாளர் திரு.நவாஸ், பொருளாளர் திரு.தீபக்  உள்பட விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.