சென்னை மெரினா கடற்கரை, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் இன்று(18.9.2023) மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமிஅவர்கள் முன்னிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டபொது மக்களின் பயண முறை குறித்த கருத்துக்கணிப்பு விழப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, வீடுவீடாக கருத்துக்கணிப்பு எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமமானது (Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA)) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைவராககொண்டு செயல்பட்டு வரும் ஒரு குழுமமாகும். இக்குழுமம் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தினைசெயல்படுத்தி வருகிறது. சென்னை பெருநகர பகுதியின் எதிர்கால போக்குவரத்தை வடிவமைக்கதயாரிக்கப்படும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக நீண்ட காலத்திற்கான ஒருங்கிணைந்தபோக்குவரத்து திட்டமாகும்.
மக்களின் பயண நேரத்தையும், செலவையும் குறைக்கும் நம்பகமான மற்றும் வேகமான பொது போக்குவரத்தைவடிவமைக்கவும், பாதுகாப்பான சாலைகளை வடிவமைக்கவும், பொது மக்களின் பயண முறை மற்றும்எதிர்பார்ப்புகளை புரிந்துக் கொள்ளவும் சிறந்த போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கவும் மற்றும்அனைவருக்கும் ஏற்ற போக்குவரத்தை திட்டமிடவும் இக்கருத்துக்கணிப்பு உதவியாக இருக்கும். எனவே, அடுத்து வரும் 25 ஆண்டு கால சென்னையின் பொது போக்குவரத்தை திட்டமிட இந்த கருத்துக்கணிப்புநடைபெற உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர். பொ.சங்கர், இ.ஆ.ப., சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும சிறப்பு அதிகாரி திரு. ஐ. ஜெயகுமார், ஐ.ஆர்.டி.எஸ்., சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர்(போக்குவரத்து) திரு. ஆர். சுதாகர், இ.கா.ப., பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் குழு தலைவர் திரு. நே.சிற்றரசு, தேனாம்பேட்டைமண்டல குழு தலைவர் திரு. எஸ்.மதன்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.