கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்புநிலையத்தில் நடைபெற்றும் வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் மரு.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மாவட்டஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்*^^***^^
அப்போது அவர் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக அம்ரூத் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும்இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மொத்தம் ரூ.296.08 கோடிகளில் ரூ. 111.72 கோடி ( அம்ரூத் ) இந்திய அரசின் மூலமாகவும், ரூ. 44.68 கோடி தமிழ்நாடு அரசின் மூலமாகவும், உலக வங்கி கடனாக ரூ. 52.46 கோடி, மூலதன மானிய நிதி ரூ.44.65 கோடி மற்றும் ரூ. 23.21 கோடி நகராட்சி நிதி பங்களிப்பு மூலமாகவும்மற்றும் 5 வருடத்திற்கான வருடாந்திர பராமரிப்பிற்கான நிதி ரூ. 19.36 கோடி நகராட்சி நிதி பங்களிப்ப. மூலமாகவும் நிறைவேற்றப்பட உள்ளது.
இத்திட்டம் நிறைவேறும் போது மக்கள் தொகைக்கேற்ப 2.80 இலட்சம் மக்களுக்கு 41. 12 மில்லியன் லிட்டர்மற்றும் உச்சகால (2047) மக்கள்தொகையின்படி 3.90 இலட்சம் மக்களுக்கு 52.04 மில்லியன் லிட்டர் குடிநீர்வழங்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு பெருஞ்சாணி கிராமத்தின் அருகே புத்தன்அணையின் மேற்புறம் உள்ள பரளியாற்றில் 8.00 மீட்டர் விட்டமுள்ள நீர் எடுக்கும் கிணறு அமைக்கப்பட்டுஅதிலிருந்து மேற்பரப்புநீரை 130 HP(14278 LPM 31 M Head 2 Nos 1 No stand bye ) மின் இயந்திரம் மூலம்நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகேஅமைக்கப்படவுள்ள 41.12 MLD புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது. பின்னர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 12 மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டிகள் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள 11 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும்சேகரிக்கப்படவுள்ளது. பின்னர் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டிகளிலிருந்து நகராட்சி முழுவதற்கும் புதியதாகபதிக்கப்படவுள்ள 420.612 கி.மீ குடிநீர் பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. இக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் 85,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்சமயம் இத்திட்டம் 98% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பகிர்மான குழாய் மற்றும் வீட்டு குடிநீர் குழாய்இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நவம்பர் மாதத்திற்குள் முடித்திடஒப்பந்ததாரருக்க. அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் சோதனைஓட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்தஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 3.9 இலட்சம் பயனாளிகள் பயன்பெறஉள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம், இ.கா.ப., நாகர்கோவில்மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு.ஆனந்த் மோகன், இ.ஆ.ப., பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திரு.எச்.ஆர்.கௌசிக், இ.ஆ.ப., நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர்திருமதி.மேரி பிரின்சி லதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆஸ்டின், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.