இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. 20 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உயர்தர பயிற்சி பெற காசோலை வழங்கி, வீராங்கனைகள் ஸ்னூக்கர் – அனுபமா, வாள்வீச்சு – மரியா அக்ஷிதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பன்னாட்டு அளவிளான சைக்கிள் போட்டியில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய சைக்கிள் வீரர் பிரதீப் சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ. 16 இலட்சம் மதிப்பிலான சர்வதேச தரத்திலான சைக்கிளையும், தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய வில்வித்தை வீராங்கனை கண்மணி அவர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க ரூ. 2.8 இலட்சம் மதிப்பிலானப்சர்வதேச தரத்திலான வில்வித்தை உபகரணத்தையும், உலக பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மகாராஜா அவர்களுக்கு அமெரிக்காவில் உயர்தர பயிற்சி பெற ரூ. 1.20இலட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.  

மேலும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆசிய பெண்கள் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் 2024-ல் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை செல்வி அனுபமா, ஆசிய ஃபென்சிங் கான்ஃபெடரேஷன் ஆணையத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான வாள்வீச்சு வீராங்கனை மரியா அக்ஷிதா அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப., உடனிருந்தார்.