தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (12.11.2024) சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் இரண்டு கரையோர பகுதிகளிலும் உள்ளதனியார் கல்லூரிகளின் அருகில் கரைகளைஅகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவமழை பெய்துவரும் நிலையில், நம்முடைய முதலமைச்சரின் உத்தரவின்பேரில் சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் எழிலகத்தில்உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையம் ஆகிய இடங்களில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர், துணை மேயர், ஆணையாளர் ஆகியோருடன் நேரில் ஆய்வு செய்தோம். இரவில் இருந்து பரவலாக மழை பெய்துவருகின்றது. இருந்தாலும், எந்த இடத்திலும் தண்ணீர்தேங்கவில்லை. இந்த நிலையில், தற்போது ஒக்கியம் மடுவுபகுதியில் இன்றைக்கு நேரில் ஆய்வு செய்து உள்ளோம். ஏற்கனவே கடந்த மாதம் 13 ஆம் தேதியன்று இதே இடத்தில்ஆய்வு செய்தோம். ஆகாயத்தாமரைகளை அகற்றினோம். அதனால் பெரிய அளவில் தண்ணீர் தேங்காமல் இருந்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து வெள்ளநீர்வெளியேறி, இந்த ஒக்கியம் மடுவு வழியாகத் தான், பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று, பின்னர் அங்கிருந்துகடலில் கலக்கிறது.
ஆனால், இங்கு ஏற்கனவே இருக்கும்நீர்வழித்தடத்தின் அகலம் மாறுபட்ட அளவுகளில் இருந்துவந்தது. தண்ணீர் வெளியேறுகின்ற பாதை குறுகலாகஇருந்ததால், வெள்ளநீர் தடையின்றி வெளியேற முடியாதஒரு சூழல் இருந்தது. அப்படி வெளியேற முடியாத வெள்ளநீர் அருகில்உள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்ளும் ஆபத்தும்இருந்தது. எனவே அதுகுறித்து ஆய்வு செய்து, நடவடிக்கைஎடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்திஇருந்தார்கள்.
அதன்படி, நீர்வளத்துறையினர் ஆய்வு செய்தார்கள். அப்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்துஒக்கியம் மடுவுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும்தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடமானது, வெள்ளநீர்வெளியேறுவதற்கு தடங்கலாக இருந்ததுகண்டறியப்பட்டது. தற்போது, அனைத்து சட்டவழிமுறைகளையும் பின்பற்றி சம்பந்தப்பட்ட அந்த தனியார்நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. கையகப்படுத்தப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட இடத்தினைதற்போது, அகலப்படுத்தி வருகின்றோம். ஏற்கனவே, 80 மீட்டர் அகலம் இருந்த அந்தஇடத்தில், நீர் தேங்காமல் உடனுக்குடன் வடிகின்றவகையில், 130 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தும் பணிகள்நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. இப்பணிகள் நிறைவுற்றால், 7 ஆயிரம் கன அடி மட்டுமேதண்ணீர் வெளியேறிய நிலையில் இருந்து, சம்பந்தப்பட்டஇடத்தில் அரசின் துரித நடவடிக்கையால், தற்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறும் வாய்ப்புஉருவாகியுள்ளது மேலும் தற்காலிக பணியாக அருகிலுள்ளஇன்னொரு தனியார் கல்லூரி எதிரே உள்ள மணல்திட்டுகளை ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் 5 பொக்லைன்இயந்திரங்களை கொண்டு சீரமைக்கும் பணி, மாநகராட்சிநிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது. இந்த இரு பணிகளையும் விரைவாக முடிக்கஅதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கின்றோம். இன்னும்மூன்று அல்லது, நான்கு நாட்களில் அனைத்து பணிகளும்முடிவடைந்து விடும். ஆகவே, திராவிட மாடல் அரசை பொறுத்தவரை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பொறுத்தவரைசென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்துநடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார். பொதுமக்களும்அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்று மாண்புமிகுதமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை கூடுதல்தலைமைச் செயலாளர் டாக்டர் கே. மணிவாசன், இ.ஆ.ப., சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., தெற்கு வட்டார துணைஆணையாளர் எம்.பி.அமித், இ.ஆ.ப., மண்டலக்குழுத்தலைவர்கள் வி.இ.மதியழகன், எஸ்.வி.ரவிச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.