மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்அவர்கள் இன்று (20.12.2022) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாண்புமிகுஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுவனை சந்தித்த. நலம் விசாரித்தார். இந்நிகழ்வின் போது அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு உதவிய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்குநன்றி தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக, மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் சிலம்பம் விளையாட்டிற்கு உபகரணங்கள் வேண்டி மனு அளித்திருந்த நபர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இனமான பேராசிரியர் அவர்களின்நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தேனாம்பேட்டைமண்டலம், வார்டு-114க்குட்பட்ட சி.என்.கே. சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 நபர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர்மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள்திரு.ஏ.ஆர்.பி.எம். காமராஜ், திருமதி ரா. மங்கை உட்பட பலர் கலந்து கொண்டனர்.