திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (23.12.2022) இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன்திட்டங்கள் குறித்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும்உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி,அவர்கள், கூடுதல் தலைமைச் செயலர் (இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை) டாக்டர் அதுல்யாமிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு சிறப்புச் செயலர்திரு.எஸ்.நாகராஜன், இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல்நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், பழனிசட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், அவர்கள், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், அவர்கள்மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன் அவர்கள் ஆகியோர்முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராமஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள்குறித்தும், ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் கீழ்வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைபொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை, தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை(மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்), கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் வளர்ச்சித் திட்டங்கள்குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், கலைஞர் நகர்ப்புறமேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், இ-சேவை மையசெயல்பாடுகள், பள்ளிக்கல்வித் துறையின் எண்ணும் எழுத்தும்இயக்க செயல்பாடுகள், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் “நான்முதல்வன்“ திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை யின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து விரிவாகவிளக்கம் அளித்தார்.
பின்னர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்பேசியதாவது:-இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமைச்சர்பெருமக்கள், உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. பல்வேறு திட்டங்கள் சிறப்பாகசெயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில திட்டங்கள் மேலும் முக்கியகவனம் செலுத்தி அவைகளையும் முதன்மையாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி வேடசந்துார் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகை சாகுபடி திட்டம்செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு அறிவிப்புதிட்டங்களும் விரைந்து செயல்படுத்திட வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 5,001 பயனாளிகளுக்கு ரூ.33.78 கோடி மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்வழங்கினார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி), திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய்அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்விஆர்.ஏ.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி துணை மேயர்திரு. எஸ்.ராஜப்பா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்திரு.கா.பொன்ராஜ், மாநகராட்சி ஆணையாளர்திரு.எஸ்.சிவசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.