வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு, இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் ‘நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியது. மேலும் சிறப்பூட்டும் வண்ணமாக தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டது. இப்படத்தில் இந்துஜா, எல்லி அவரம் ‘இளைய திலகம்‘ பிரபு, யோகி பாபு, ஹியா தவே, பிரணவ் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் K செல்வராகவன் நடிக்கிறார். ************
*தொழில்நுட்ப குழுவினர்* இயக்குனர் : K செல்வராகவன் தயாரிப்பு : கலைப்புலி S தாணு இசை : யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ் படத் தொகுப்பு : புவன் சீனிவாசன் தயாரிப்பு வடிவமைப்பு : R K விஜய முருகன் நடனம் : கல்யாண் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர் சண்டைக் காட்சி : திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா தயாரிப்பு நிர்வாகி : வெங்கடேசன் ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் : இலன் குமரன் ஆடை வடிவமைப்பு: காவியா ஸ்ரீ ராம் DI : நாக் ஸ்டூடியோஸ் கலரிஸ்ட்: பிரசாந்த் சோமசேகர் பாடல்கள் : யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ் ஸ்டில்ஸ் : தேனி முருகன் மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹமத், டைமண்ட் பாபு