1.9.2023 நடைபெற்ற சிங்கப்பூரின் 9 ஆவது அதிபர் தேர்தலில் 66 வயதுடைய தமிழர் தர்மன் சண்முக ரத்னம்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஏறத்தாழ 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான தர்மன் சண்முக ரத்னம் ‘லண்டன் °கூல் ஆப் எக்னாமிஸி‘ல்இளங்கலை பொருளாதாரம் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வொல்ப்சன் கல்லூரியில் முதுகலைபொருளாதாரம் (தத்துவம்) பட்டமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொதுநிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MPA) பெற்றவர் ஆவார்.
ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதர்மன் சண்முகரத்னம் அவர்கள், 2001 முதல் 2019 வரை துணை பிரதமராகவும், 2019 முதல் 2023 வரை மூத்தஅமைச்சராவும் இருந்து கல்வி, நிதி, மனிதவளம், சமூக கொள்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்பணியாற்றியுள்ளார்.
2011 முதல் 2023 வரை ‘சிங்கப்பூரின் நாணய ஆணைய‘த்தின் தலைவராகவும், 2019 முதல் 2023 வரை‘சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு கழக‘த்தின் (Deputy Chairman of the Government of Singapore Investment Corporation-GIC) துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
தர்மன் சண்முக ரத்னம் அவர்கள் 2001ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஜூரோங்தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்துள்ளார்.
ஏற்கனவே தமிழர் எ°. ஆர். நாதன் அவர்கள் சிங்கப்பூரின் அதிபராக பதவி வகித்து சிறப்பு செய்துள்ளார். அந்தவரிசையில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி உலக நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைஅளிக்கிறது.
சிங்கப்பூர் நாட்டில் சீனர்கள், மலாய் காரர்கள், இந்தியர்கள் என பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் வசித்துவருகிறார்கள். அங்கு சீனம். மலாய். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன.
உலக அரங்கில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் சிங்கப்பூர் அரசுக்கு ஒரு தமிழர் மீண்டும் அதிபராகவந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம்அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.