15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் எஸ்.ஆர்.டி. என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும்  பான் இந்திய திரைப்படமான  “மட்கா” படத்திற்காக, ரூ.15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.  நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘மட்கா’. தற்போது இப்படத்தின் மூன்றாவது  கட்டமாக  பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு விரிவான 35 நாள் படபிடிப்பாகும்.  இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 15 கோடி ரூபாய் பெரிய நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில்  விண்டேஜ் வைஸாக் நகர அமைப்பை,  தயாரிப்புக் குழு உருவாக்கியுள்ளது. இது பிரம்மாண்டத்துடன் கூடிய பழைய வைஸாக் நகருக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் புதுமையான அனுபவமாக இருக்கும்.  இப்படத்தில் வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்*********

தொழில்நுட்பக் குழு:  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்  தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்  ஒளிப்பதிவு : பிரியசேத் எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R  தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா  கலை: சுரேஷ்  நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா  மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா