சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் ‘வரலாறு முக்கியம்”. ஜீவா வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு குடும்பம் குடியேறுகிறது. அந்த குடும்பத்தில் இரண்டு இளம் பெண்கள் இருக்கின்றார்கள். அதில் இளைய பெண்ணை ஜீவா காதலிக்கிறார். பிறகு காதலியின் அக்காவை ஜீவா பார்க்கிறார். அக்கா, தங்கையைவிட அழகாக இருப்பதால் தங்கையை விட்டுவிட்டு அக்காவை காதலிக்கிறார். இந்த காதல் திருமணத்தில் முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை. குடும்பத்துடன் பார்க்கும் தரமான படங்களை தந்து சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வந்த சூப்பர் குட் பிலிம்ஸ், இரட்டை அர்த்தங்கள் கொட்டிக் கிடக்கும் பாதையில் பயணித்திருப்பது வேதனைக்குரியது. பாலுணர்வு இரட்டை அர்த்த வசனங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ்சுக்கு தேவையா? யானைக்கும் அடி சறுக்கும் என்பதை மெய்பித்திருக்கிறது.******
சரி இனி படத்திற்குள் செல்வோம். கதை மோலோட்டமாக செல்கிறது. கரையோரத்தில் கடல் அலை ஆர்ப்பரிப்பது போல், ஒவ்வொரு காட்சியும் ஆர்பரித்து அடங்குகிறது. மற்ற படங்களில் வி.டி.வி.கணேசின் வாய் வேற வாய். இந்த படத்தில் நாரவாய்.