ராஜூ, சிரிஷ் தயாரிப்பில் வம்சி பய்டிபள்ளி இயக்கத்தில் விஜய், சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், யோகிபாபு. ராஜ்மிகா மந்தனா நடித்த படம் வாரிசு. தொழில் அதிபர் சரத்குமாரின் மூன்றாவது மகன் விஜய். தந்தையுடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார் விஜய். தாய் ஜெயசுதாவின் வேண்டுகோளை ஏற்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் தந்தையின் 60 ஆம் ஆண்டு கல்யாணத்துக்கு வீட்டுக்கு வருகிறார் விஜய். வீட்டில் வந்து பார்க்கும்போதுதான் தனது மூத்த அண்ணன்கள் ஶ்ரீகாந்த், ஷாம் ஆகியோர்களின் நடவடிக்கைகளால் குடும்பம் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. பிரிந்து கிடந்த உறவுகளை சீர்படுத்தி உறவுகளை ஒன்று சேர்ப்பதுதான் கதை. சிவாஜியின் ‘படிக்காத மேதை’ படத்தை கலர்புள்ளாக்கி பழைய சோற்றை தலைவாழை இலையில் விருந்து படைத்திருக்கின்றார் இயக்குநர். விஜய் செண்டிமெண்ட் நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். கண்பார்வையிலேயே கதையை சொல்கிறார் சரத்குமார். வில்லன் பிரகாஷ் ராஜின் தனித்தன்மையை இப்படத்தில் காணமுடியவில்லை. யோகிபாபுவின் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. படத்தின் வெற்றிக்கு அதிக பலம் சேர்ப்பது தமனின் இசைதான். திரையங்கில் ரசிகர்களை ஆட வைத்திருக்கிறார். ராஜ்மிகா மந்தனாவின் ஆட்டம் படத்திற்கு துணையாக அமைந்திருக்கிறது. ஷாம் வில்லத்தனத்தில் மிளிர்கிறார்.*******
-ஷாஜகான்-