வாவ் மீடியா எண்டர்டெய்மெண்ட் டின் தயாரிப்பாளர் துரை வீரசக்தி தயாரிப்பில், சிவபிரகாஷ் இயக்கி வரும் படம் “பேரன்பும் பெருங்கோபமும்”. “பரியேறும் பெருமாள்“, “அசுரன்” என சமத்துவம் பேசும் தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்புகளின் வரிசையில், செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன். வெரும் பட்டங்களால் தன்பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன் . இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த திரைப்படம். இடத்தில் விஜித் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக, ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார். மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.*********
இத் திரைபடத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். வெற்ற்ப்படமாக ஓடிக்கொண்டிருக்கும் விடுதலை படத்திற்கு பிறகு இந்தத் திரைப்படத்தை ஒப்புக்கொண்டுள்ளார். விடுதலை இயக்குனர்வெற்றிமாறன் பாலுமகேந்திரா உதவியாளர். இப்படத்தை இயக்கிவரும் சிவபிரகாஷ், பாலு மகேந்திராவின்சினிமா பட்டறை மாணவர். பாலு மகேந்திராவின் இந்த இரு இயக்குனர்களுக்கு இளையராஜா இசைஅமைப்பது குறிப்பிடத்தக்கது.
‘சத்தம் போடாதே‘, ‘மூன்று பேர் மூன்று காதல்‘ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த JB தினேஷ் குமார்ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ராமர், படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் ‘அசுரன்‘, ‘விடுதலை‘ போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தரமான படைப்புகளை தந்து வரும், VAU MEDIA ENTERTAINMENT-சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தி இப்படத்தை தயாரித்துவருகிறார்.