மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘உருச்சிதை‘

வி டி எஸ். சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்உருச்சிதை’. இயக்குனர் எம்சிவி தேவராஜ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.  புதுமுகங்கள் கார்த்திகேயன் மற்றும் சுகுணா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கதுஎங்கேயும் நடந்திருக்க முடியாத கேள்விப்பட்டிராத கதையம்சத்துடன் குடும்பப்பாங்காக இந்தப்படம் உருவாகியுள்ளதுஇந்த படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகளை கில்ட் தலைவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் வெளியிட்டார். வரும் மே 5 முதல் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.******