“கிடுகு” திரைப்படம் வேளாங்கண்ணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மதுரையில் இருந்து கிளம்பிய நான்கு நண்பர்கள் வேளாங்கண்ணியில் ஒரு பாதிக்கப்பட்ட திருநங்கைக்கு உதவி செய்கிறார்கள். அரசியல்வாதி, சமூக விரோதிகள், காவல்துறை என அனைவரையும் திட்டமிட்டு கொடூரமான முறையில் கொலை செய்கின்றனர். ஏன் கொலை செய்கிறார்கள் என்பதுதான் கதையின் கரு. இப்படத்தில் கல்லூரி வினோத், மணிமாறன், பீட்டர், சரவணன், சசிகலா, சந்துரு, காளி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை ஜெர்சன். படத்தொகுப்பு ஆரஞ்சு சிவா. பாடல்கள் எதார்த்த கவிமணி ஜிஜி.விக்னேஷ். வீரமுருகன் இந்த படத்தை இயக்கி தயாரித்து உள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான கிடுகு திரைப்படம் சென்சாரில் ஆறு மாத காலம் தாமதமாகி 270 காட்சிகள் சென்சாரில் வெட்டப்பட்டது. அதன்பின் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்சினை காரணமாக எந்த ஒரு திரையரங்கும் வெளியிட முன் வராததால் தாமரை தொலைகாட்சியில் வெளியானது. வெளியான சில நாட்களிலே படம் மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்தது. இப்போது இந்த படம் தெலுங்கில் மறுபதிப்பு செய்யப்பட்டு குமரி விஜயன் யூடிப் சேனலில் பிப்ரவரி 11 தைப்பூச திருநாளில் வெளியாகிறது. என்று படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.