கதாநாயகனாக கவுண்டமணி நடிக்கும் படம் “பழனிச்சாமி வாத்தியார்”

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் தயாரிக்கும்  படம்பழனிச்சாமி வாத்தியார்“.  ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. சமூக அக்கறை கொண்ட விஷயங்களை கூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், டி.சிவா, மனோபாலாசதீஷ் குமார்நந்தகோபால், ஆத்.கே.சுரேஷ், மதுரை  டாக்டர் சரவணன்,  மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார்,  ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.யோகா டீச்சராக சஞ்சனா சிங் நடிக்கிறார்மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.***************

wide angle   ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்வைரமுத்து வரிகளுக்கு தனித்த இசை, மனதில் நிற்கும் பாடல்களை தந்த இசையமைப்பாளர் K  இந்த படத்திற்குஇசையமைக்கிறார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 படத்திற்கு இசையமைத்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார்கதை, திரைக்கதை, வசனம்  எழுதி இயக்குகிறார்திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்Executive Producer & Pro – மணவை புவன் தயாரிப்புமதுரை செல்வம். இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த  மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.