வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை  நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.  மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது மிகப்பெரிய பாய்ச்சலாகும்.  18ஆம் நூற்றாண்டிலேயே, மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிராக பேசியதோடு, தந்தை பெரியாருக்கு முன்பாகவே, சாதி, மதங்களை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார்.   சங்கராச்சாரியார், மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சம்ஸ்கிருதமே என்று நிறுவ முயன்றபோது, மிக ஆணித்தரமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தவர் வள்ளலார்.சமகாலத்தில் ஆரியத்துவா, இந்துத்துவா என்ற அடிப்படையில், மக்களுக்கு எதிராக, ஜனநாயகத்திற்கு விரோதமாக பல்வேறு அடக்குமுறைகளை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கையாண்டு வரும் நிலையில், தமிழர் ஆன்மிகச் சிந்தனை தனித்துவமானது என்பதை வள்ளலாரின் கோட்பாடுகள் வாயிலாக புரிந்து கொள்ளலாம். இப்படி பல்வேறு சிறப்புக்குரிய வள்ளலாரை போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை  நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.