“அகத்தியா” திரைப்பட விமர்சனம்

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் கவிஞர் பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா, யோகிபாபு, ராதாரவி, சார்லி, ரோகிணி, எட்வர்ட், மெட்யிடா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அகத்தியா”. ஜீவா திரைப்பட கலை இயக்குநர். ஒரு படப்பிடிப்புக்காக புதுச்சேரிக்கு தனது குழுவுடன் வருகிறார். 1940 ஆம் ஆண்டில் புதுச்சேரியை ஆண்ட பிரன்சு கவர்னரின் பாழடைந்த மாளிகையில் படபிடிப்பு அரங்கம் அமைக்கிறார். ஆனால் திடீரென படபிடிப்பு ரத்தாகிறது. அதனால் அந்த மாளிகையை பேய் மாளிகையாக அரங்கம் அமைத்து கண்காட்சி நடத்துகிறார் ஜீவா. ஆனால் உண்மையிலேயே அந்த மாளிகையில் அர்ஜூன், ராதாரவி, எட்வர்ட், மெட்யிடா ஆகியோர் 1940 ஆண்டு  கொல்லப்பட்டு இறந்துபோனதால் பேய்களாக அந்த மாளிகையில் திரிகிறார்கள். அர்ஜுனனும் மற்றவர்களும் எதற்காக கொல்லப்பட்டார்கள்?. பேய் இருப்பது தெரிந்தும் ஜீவா ஏன் அந்த மாளிகைக்குள் திரும்பவும் செல்கிறார்? பேய்களிடமிருந்து ஜீவா தப்பித்தாரா?. என்பதுதான் கதை. நீண்ட இடைவேளைக்குப் பிறகும் ஜீவா தனது சுறுசுறுப்பு குறையாமல் துருதுருவென நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். ராஷி கண்ணா மெழுகுச்சிகையாக காட்சியளித்து இளசுகளின் கண்களுக்கு விருந்தாகிறார். சித்த மருத்துவராக வரும் அர்ஜூன் தனது கதாபாத்திரத்தை ந்ன்றாக உள்வாங்கி நடித்திருப்பது அவரது அனுபவத்தை காட்டுகிறது. ராதாரவிக்கு பிரன்சு கவர்னரின் அந்தரங்க ஆலோசகராக வரும் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்திருக்கிறார். படத்தை சலிபுத்தட்டாத வகையில் விறுவிறுப்பாகவும் சித்த மருத்துவத்தின் சிறப்புகளை தூக்கி நிறுத்தும் வகையிலும் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் பா.விஜய் பாராட்டுக்குறியவர். ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையை  ரசித்து தாளம்போடலாம். உச்சக்கட்ட காட்சி அதிக நேரம் நீடிக்கிறது. ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் யோகிபாபு வந்துபோவது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. அவருக்கு இன்னும் சில காட்சிகளை வைத்திருக்கலாம். அமானுஷ்ய காட்சிகள் படம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. பழங்காலத்து பியானோ, கிராமபோன், குரல்பதிவு கருவிகளை படத்தில் காட்டியிருப்பது வரவேற்க்கதக்கது.  சமூக சீர்திருத்தவாதியான கவிஞர் பா.ரஞ்சித்,  பேய் படங்களை எடுக்கும் இயக்குநர் விட்டலாச்சாரியாவின் ரசிகராக இருப்பாரோ என்னவோ? சித்த மருத்துவ ஆசான் அகத்தியர் முனிவரை குறிக்கும் வகையில் படத்திற்கு “அகத்தியா”  என பெயரிடப்பட்டிருக்கலாம்.