வெந்து தணிந்த காட்டில் உச்சத்தை தொட்ட சிம்பு

வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம் “வெந்து தணிந்தது காடு”  கருவேல முள் காட்டில் விறகு வெட்டி பிழைக்கிறார் பட்டதாரியான சிம்பு. அம்மா ராதிகாவின் ஆலோசனைப்படி மும்பையிலுள்ள ஒரு புரோட்டா கடையில் வேளைக்கு சேருகிறார். பெயருக்குத்தான் அது புரோட்டா கடை. அது கூலிக்கு கொலை செய்யும் தாதா கூட்டத்தின் உறைவிடமென்பது சிம்புவுக்கு தெரிய வருகிறது. கூலிக்கு கொலை செய்யும் சிம்பு எப்படி அந்த கூட்டத்துக்கே தலைவனாகிறார் என்பதுதான் கதை. விறகு வெட்டியான ஏழை சிம்பு மனிதர்களை வெட்டும் தாதாவாக வளரும்வரை நடிப்பின் உச்சத்தை தொட்டு விட்டார் சிம்பு. சூழ்நிலைதான் மனிதர்களின் வாழ்வை திசை திருப்புகிறது என்ற வாழ்வியலை படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் வாசுதேவ மேனன்*******

கதாநாயகி சித்தி இட்டானியின் அமைதியான நடிப்பு அனைவரையும் கவர்கிறது.  நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் அப்புக்குட்டியின் யதார்த்தமான பேச்சிலும் நடிப்பிலும் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.  விரோதிகளிடமிருந்து தனது மகனை காப்பாற்றத் துடிக்கும் தாய் உள்ளத்தின் உணர்வை நமது கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ராதிகா சரத்குமார்.