சிங்கப்பூர் சலூன் திரைப்பட விமர்சனம்

வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்தியராஜ், மீனாட்சி செளத்திரி, லால், அன்ஷிதல், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், ஜின்னி ஜெயந்த், ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சிங்கப்பூர் சலூன்’. பட்டதாரியான ஆர்.ஜே.பாலாஜி சிறுவயதிலிருந்தே சிகையலங்கார நிபுணராக வேண்டும் என்று நினைவுடன் வளர்ந்து வருகிறார். தந்தையின் விருப்பப்படி பட்டதாரியாகிய பின்னரும் சொந்தமாக ஒரு சலூன் கடையை திறந்து சிகையலங்காரம் செய்ய துணிகிறார். ஆனால் பல தடங்கல் வருகிறது. தடங்கல்களை முறியடித்து வென்றாரா? இல்லையா என்பதுதான் கதை. ஆர்.ஜே.பாலாஜியின் சிறுவயது நிகழ்வு, பாடசாலை நிகழ்வு, கல்லூரி காலகட்டங்களின் நிகழ்வுகள் என பல உபகதைகளுடன் திரைக்கதை பயணிக்கிறது. சத்தியராஜின் வரவுததான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. இப்படத்தில் பாலாஜியின் நடிப்பு மெருகேறியிருக்கிறது. உபகதைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி கதையின் கருவுக்குள் நுழைக்க இயக்குநர் அரும்பாடு பட்டிருக்கிறார்.  தர்ப்பை பிடித்த கையில் சவரக்கத்தி. ஒற்றுமையை உணர்த்த ஆர்.ஜே.பாலாஜி இதைவிட வேறென்ன செய்ய வேண்டும். பாராட்டுகள் ஆர்.ஜே.பி……