‘ஜோஷ்வா’ திரைப்பட விமர்சனம்

ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வருண், கிருஷ்ணா, ராக்ஹே, திவ்யதர்ஷினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்ஜோஷ்வா‘. உலகளவில் பணத்துக்காக கொலை செய்யும் ஒப்பந்த கொலைகாரர் வருண். அமெரிக்காவில் பிரபலமான வழக்கறிஞர் ராக்ஹே. போதை பொருள் கடத்தல் தலைவனுக்கு எதிராக ராக்ஹே வாதாடுவதால் அவளை கொலை செய்ய வருண் நியமிக்கப்படுகிறார். ஆனால் ராக்ஹேயை பார்த்தவுடன் வருணுக்கு அவள்மீது காதல் பிறக்கிறது. கொலைகாரர்களிடமிருந்து காதலியை காப்பாற்ற அவளுக்கு பாதுகாவலாராக மாறுகிறார் வருண். கொலைகாரர்களிடமிருந்து காதலியை எப்படியெல்லாம் காப்பாற்ற முயர்சிக்கிறார் என்பதுதான் கதை. சண்டைக்காட்சிகளில் வருண் மின்னுகிறார். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பின்னணிப்பாடல் ஒலித்துக் கொண்டேயிருப்பதால் கதையை ரசிக்க முடியவில்லை. கெளதம் மேனன் படத்தை கவுத்திவிட்டார். ஐசரி கணேசனோடு கெளதம் மேனனுக்கு என்ன உள்பகையோ என்று தெரியவில்லை. முயற்சியை கைவிடாமல் வருண் மீண்டெழ வாழ்த்துக்கள்.