சென்னையில் கன மழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து சீரமைக்க ஆணை

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர் 
எ.வ. வேலு  கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை 12.11.2021 காலை முதலே சாலைகளிலும், வீதிகளிலும் சென்று ஆய்வு செய்தார்கள்.மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும் உடன் சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். கடந்த, சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சென்னையில் தன் உச்சக்கட்டஆர்ப்பரிப்பைக் காட்டியதால், வரலாறு காணாத வகையில் கொட்டி தீர்த்த மழையினால்பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க கொளத்தூர் டி.ஆர்.ஜே. மருத்துவமனை, செந்தில் நகர்பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்ட குழிப்பள்ளங்களை 50க்கு மேற்பட்ட சாலைப் பணியாளர்கள்கொண்டு சீரமைக்கவும், வீனஸ் நகர், கணேஷ் நகர், கண்ணகி நகர், டெம்பிள் பள்ளி பகுதிகளில்தேங்கியிருந்த மழைநீரை மின் மோட்டர்களை பயன்படுத்தி நீரை வெளியேற்ற ஆணையிட்டார். மேலும், வீனஸ் நகர், டெம்பிள் பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் உள்ளஅடைப்புகளை அகற்றி நீர் வழி தடங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். 

நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில், ஏற்பட்டுள்ள சேதங்களைஉடனடியாக சீரமைக்க பிற மாவட்டங்களிலிருந்து சுமார் 475 சாலைப் பணியாளர்களைசென்னைக்கு வரவழைத்து, அவர்கள் மூலமாக சீரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகதெரிவித்த அமைச்சர் அவர்கள், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளின்கீழ் உள்வட்டச் சாலையில்ரெட்டேரி அருகில் சிறுபாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தாழங்குப்பம் பகுதியில், மழைநீர் வெளியேற்றத்தை பார்வையிட்டு, ரெட்டேரிஆற்றினையும் அதிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதையும் பார்வையிட்டார்.

 தெருக்களிலும், சாலைகளிலும் தேங்கியிருந்த நீரை உடனடியாக ராட்சத மின் மோட்டர்கள்மூலமாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கொளத்தூரில் உள்ள பெரியார் மருத்துவமனை வளாகத்திற்குள் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற ஆணையிட்டார். அதன் பிறகு மூன்று அமைச்சர்களும் வடசென்னையில் பல்வேறு தெருக்களுக்கும் சென்றுமழைநீர் தேங்கியிருந்த பகுதிகளை கண்டறிந்து உடனடியாக மழைநீரை வெளியேற்ற ஆணையிட்டார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு இராஜ அண்ணாமலை மன்றம் மற்றும் பல பகுதிகளில்அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், பாய், போர்வை போன்ற அத்தியாவசியப் பொருட்களைமழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்கினார். இந்த, ஆய்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.தயாநிதி மாறன், நகர்புறவளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, இ.ஆ.ப., உயரகல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சிஆணையர் ககன்தீப் சிங்பேடி ஆகியோர் உடன் சென்று ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.