வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘வெள்ளையனே வெளியேறு இயக்க ஆண்டுவிழா நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ‘செய் அல்லது செத்துமடி’ என நாட்டு மக்களுக்கு காந்திஜி கூறிய சக்தி வாய்ந்த கோஷத்துடன் இந்த இயக்கம் தொடங்கியது. நமது சுதந்திரப் போராட்ட இயக்கத்தில், இது புது சக்தியை புகுத்தியது மற்றும் கடந்த 1947ம் ஆண்டு, ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேற வைத்தது. இந்நாளில், காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்க, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்ட நமது வீரமான இந்திய புதல்வர்கள் மற்றும் புதல்விகளின் எண்ணற்ற தியாகங்களை நாம் நினைவுக் கூர்வோம். இன்று ஏழ்மை, கல்வியறிவின்மை, சமத்துவமின்மை. ஊழல் மற்றும் ஜாதியம், மதவாதம் மற்றும் பாலின பாகுபாடு போன்ற சமூக கொடுமைகள் ஆகியவற்றை இந்தியாவில் இருந்து ஒழிக்க நாம் மீண்டும் அர்ப்பணிப்போம். நமது தாய்மொழி பயன்பாடு, உடை மற்றும் இந்திய பாரம்பரியத்துக்கு மதிப்பளிப்பது போன்றவையாக இருக்கட்டும் – நமது வாழ்க்கையில் ‘பாரதியத்துவத்தை’ மீண்டும் கொண்டு வருவதை நாம் வரவேற்போம். அனைத்தும் உள்ளடங்கிய, நம்பிக்கையான தற்சார்பு இந்தியாவுக்கு, நாம் ஒன்றாக இணைந்து முன்னேறுவோம்.