சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு

சிக்கலான நேரங்களில் நம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை நிறைந்த புதிய அனுபவங்களுக்கான வழிகளை இலக்கியம் அளிக்கிறது’’ என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார். இடங்கள்நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை இலக்கிய நூல்கள் மீண்டும் உருவாக்கி,  நாம் நம்மை இழக்கும் உலகுக்குள் மாயமாக தப்பிச் செல்ல வைக்கின்றன’’ என அவர் கூறினார்.  டைம்ஸ் இலக்கிய திருவிழா’ நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசியதாவது: 

நெருக்கடியான நேரத்தில்இலக்கியம்தான் பொருத்தமான கேள்விகளை எழுப்பிபொருத்தமான பதில்களை அளிக்கும். படைப்பாளிகளாகஒழுக்கவாதிகளாகவழிக்காட்டிகளாக மற்றும் தத்துவவாதிகளாக –   இலக்கியவாதிகள்தங்கள் படைப்புகள் மூலம்நமது கற்பனையை பல வழிகளில் ஈர்க்கின்றனர்.  வேறு எதுவும் செல்ல முடியாத வகையில்சிறந்த எழுத்துக்கள் நம்மை பல வழிகளில் சென்றடைகின்றன.  காலம் மற்றும் இடத்தின் அனைத்து வரம்புகளையும் தாண்டிய அனுபவத்தில்நாம் வார்த்தைகளின் உலகில் நம்மை இழக்கிறோம். சிறந்த படைப்பில் ஒருவர்  மூழ்குவதற்கு பொருத்தமான நேரம் என்று எதுவும் இல்லை. பழங்காலத்திலிருந்தேஅறிவு மற்றும் ஞானத்தின் களஞ்சியமாக இந்தியா இருந்திருக்கிறது. இது கலாச்சாரத்தின் புகழ்பெற்ற தொட்டில். இது வேதங்கள்உபநிடதங்கள் உட்பட தத்துவத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் மற்றும் பகவத் கீதைஎன்றும் அழியாத இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம்பஞ்சதந்திர கதைகள்அறிவுரை கதைகள்காளிதாசரின் நாடகங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளது.  இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசினார்.