சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமாமாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை கிரீன் சிட்டி அரிமா சங்கம், சென்னை கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து ஒருலட்சம் மரவளர்க்கும் திட்டத்தின் படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமா மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழா மாவட்ட தலைவர் லயன்அசோக் கண்ணா தலைமையில் நடைபெற்றது.
அமைச்சரவை பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பன்னாட்டு அரிமா சங்கத்தின்முன்னாள் தலைவர் PMJF. லயன்.பிரையன் ஷீகன், அவரது மனைவி லோரி ஷீகன் ஆகியோர் நிகழ்ச்சியில்கலந்து கொண்ட அரிமா சங்க குடும்ப உறுப்பினர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்திமரக்கன்றுகளை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து அரிமா சங்க மாவட்ட ஆளுநர் லயன்.ஸ்ரீதர் அரிமா சங்க கூட்டு மாவட்ட முன்னாள்ஆளுநர் லயன்.மாணிக்கம், முதல் துணை நிலை ஆளுநர் வரதராஜன், இரண்டாம் துணை நிலை ஆளுநர்போஸ், மாவட்ட தலைவர் கே.வி. கோபாலகிருஷ்ணன், கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவர் பி.ஆர்.எஸ்சரவணராஜ், பொருளாளர் ஐநா கண்ணன், செயலாளர் அண்ணாமலை, லயன்.ரவிசங்கர் ஆகியோர்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட, புங்கை, வேங்கை, தேக்கு, அரசமரம் உள்ளிட்ட நிழல் தரும் மரக்கன்றுகள், நெல்லி, கொய்யா, பாதாம், உள்ளிட்ட கனி தரும்மரக்கன்றுகள், மல்லி, ரோஜா, செம்பருத்தி, பாரிஜாதம், நந்தியாவட்டை உள்ளிட்ட பூச்செடிகள் நிகழ்ச்சியில்கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.